LATEST NEWS
ரஜினிக்காக அஜித்தை ஓரம் கட்டிய லைகா நிறுவனம்.. இதென்னடா விடாமுயற்சி படத்திற்கு வந்த சோதனை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார். படத்தின் ஷூட்டிங் கடந்த சில நாட்களுக்கு முன்பு அர்பைஜனில் தொடங்கியது. முதல் கட்ட ஷூட்டிங்கை முடித்த நிலையில் காலநிலை மாற்றம் காரணமாக இரண்டாம் கட்ட படபிடிப்பு தள்ளி போனது.
இன்னும் திரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளும் இதர காட்சிகளும் எடுக்கப்படாமல் இருக்கிறது. அடுத்த கட்ட படபிடிப்பு விரைவில் தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் விடாமுயற்சி படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் அதிரடியாக ஒரு முடிவை எடுத்துள்ளதாம்.
பொருளாதார பிரச்சினை காரணமாக விடாமுயற்சி பட ஷூட்டிங்கை சிறிது காலத்திற்கு ஒத்தி வைக்க முடிவு எடுத்துள்ளார்களாம். ஏனென்றால் லைகா நிறுவனம் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் வேட்டையன் திரைப்படத்தை தயாரிக்கிறது.
இரண்டு பெரிய பட்ஜெட் படங்களை ஒரே நேரத்தில் எடுக்க முடியாத காரணத்தினால் முதலில் ரஜினியின் வேட்டையன் திரைப்பட ஷூட்டிங்கை முழு மூச்சுடன் எடுத்து முடித்துவிட்டு அதிலிருந்து வரும் லாபத்தை வைத்து வைத்து விடாமுயற்சி படத்தை எடுக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. விடாமுயற்சி படத்தின் அறிவிப்பு வந்த நாள் முதல் ஷூட்டிங் தள்ளி போனதுடன் அடுத்தடுத்த சிக்கல்கள் ஏற்பட்டு தற்போது படத்தை ஒத்தி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.