LATEST NEWS
யாருக்காகவுமே செய்யாத அந்த ஒரு விஷயம்.. அஜித்துக்காக செய்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்..!!
ரசிகர்களால் அன்புடன் தல என அழைக்கப்படும் அஜித் குமார் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சினிமா பின்னணியில் இருக்கும் குடும்பத்திலிருந்து ஒருவர் திரையுலகில் நிலைத்து நிற்பது கடினமான விஷயம்.
அப்படி இருக்க யாருடைய தயவும் இல்லாமல் திரையுலவுக்குள் நுழைந்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் அஜித். இயக்குனர் வசந்தின் இயக்கத்தில் அஜித் நடித்த ஆசை படம் சூப்பர் ஹிட் ஆனது. இதனையடுத்து காதல் கோட்டை, காதல் மன்னன் என அடுத்தடுத்த படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அமர்க்களம் படத்தில் நடித்த போது அஜித் ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பொதுவாக அஜித்குமார் யாருடைய பிரச்சனைக்கும் செல்ல மாட்டார். மேலும் அரசியல் சார்ந்த கருத்துகளையும் அவர் தெரிவிக்க மாட்டார். இந்நிலையில் அஜித் அரசியலுக்கு வர வேண்டும் என ஆசைப்பட்டவர் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா.
தனக்கு பின்னால் அஜித் அரசியலுக்கு வர வேண்டும் என ஜெயலலிதா ஆசைப்பட்டாராம். இதனை பல பத்திரிகையாளர்கள் கூறியுள்ளனர். அஜித்தின் நண்பர் மறைந்த வெற்றி துரைசாமியின் திருமணத்திற்கு ஜெயலலிதா ஒரு முறை காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அஜித்தை பார்த்தவுடன் தனது காரில் இருந்து கீழே இறங்கி நலம் விசாரித்துள்ளார். வேறு யாருக்காகவும் ஜெயலலிதா அப்படி செய்ததே இல்லையாம்.