LATEST NEWS
“விஜய் கூட சண்டை நிறைய பிரச்சனை இருக்கு”.. அரசியல் வருகை குறித்து அதிர்ச்சி தகவலை கூறிய நடிகர் அருண்பாண்டியன்..!!
தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருப்பவர் நடிகர் விஜய். கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதனையடுத்து தான் ஏற்கனவே கமிட் ஆகியுள்ள 69 ஆவது படம் தான் தனது கடைசி படம் என விஜய் அறிவித்துள்ளார். அதன்பிறகு விஜய் முழு நேர அரசியலில் இறங்கப் போவதாக தெரிவித்துள்ளார். மேலும் சமீபத்தில் தான் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் விஜய் அரசியல் கட்சியை தொடங்கினார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் அருண் பாண்டியனிடம் விஜயின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அருண்பாண்டியன் விஜய் உடன் நான் சண்டை போட்டு இருக்கிறேன். நிறைய பிரச்சனைகள் இருக்கிறது.
ஆனால் இந்த விஷயத்தில் அவருக்கு எனது பாராட்டுக்கள். பொதுவாக சினிமாவில் தனது காலம் முடிந்த பிறகு தான் அரசியலில் இறங்குவார்கள். ஆனால் சினிமா வாழ்க்கை உச்சத்தில் இருக்கும்போதே விஜய் துணிந்து இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார். அதற்கு எனது வாழ்த்துக்கள் என கூறியுள்ளார். விஜய் பற்றி நடிகர் அருண்பாண்டியன் பேசியது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.