LATEST NEWS
சூப்பர் ஹிட் பட இயக்குனருடன் கைகோர்க்கும் நடிகர் கார்த்தி.. அப்போ ஹீரோயின் இவங்களா..? இந்த காம்பினேஷன் நல்லா இருக்கே..!!
பிரேம்குமார் இயக்கத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் 96 படம் வெளியானது. இந்த படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. நடிகர் கார்த்தி பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் நடிகராக அறிமுகமானார்.
இதனை அடுத்து ஆயிரத்தில் ஒருவன், மெட்ராஸ், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, சகுனி, அலெக்ஸ் பாண்டியன், கொம்பன், கடைக்குட்டி சிங்கம், கைதி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கார்த்திக்கு தென் இந்திய ஃபிலிம் ஃபேர் விருதுகள், எடிசன் விருதுகள் தமிழக அரசு திரைப்பட விருதுகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.
மணிரத்தினம் இயக்கத்தில் வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கார்த்தி தனது நடிப்பு திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினார். கடைசியாக கார்த்தி நடிப்பில் வெளியான ஜப்பான் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் 96 இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தெலுங்கு சீரியல் நடிகை சுவாதி கொண்டே நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது கார்த்திக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீதிவ்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சுவாதி கொண்டே வேறு ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளராம்.