LATEST NEWS
இனி இந்த குரலை கேட்க முடியுமா.. வெங்கட் பிரபு, பிரேம்ஜியுடன் இணைந்து பாடிய பவதாரணி.. வைரலாகும் வீடியோ..!!
இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரணி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவர் கடந்த 2000- ஆம் ஆண்டில் வெளியான பாரதி திரைப்படத்தில் மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலை பாடினார். இந்த பாடலுக்காக பவதாரணிக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
இதனையடுத்து முன்னதாக 1984-ஆம் ஆண்டு வெளியான மை டியர் குட்டிசாத்தான் என்ற மலையாள திரைப்படத்தில் திதிதே தாளம் என்ற பாடலை பவதாரணி பாடியுள்ளார். இதனை தொடர்ந்து ராசையா, தேடினேன் வந்தது, காதலுக்கு மரியாதை, அலெக்சாண்டர், ஃபிரண்ட்ஸ், தாமிரபரணி, மங்காத்தா, கோவா, ஒளியின் ஓசை, அனேகன் உள்ளிட்ட திரைப்படங்களில் பல்வேறு பாடல்களை பவதாரணி பாடியுள்ளார்.
இவர் மிதர் மை பிரண்ட், பிர் மிலேங்கே, அமிர்தம், இலக்கணம், மாய நதி ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். கடந்த ஐந்து மாதமாக பவதாரணி புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி பவதாரணி உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
View this post on Instagram
பவதாரணி இறந்தாலும் காலத்தால் அழிக்க முடியாத பல சிறந்த பாடல்களை மக்களுக்கு கொடுத்து சென்றுள்ளார். இந்நிலையில் பவதாரணியின் சகோதரி இணையத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பவதாரணி வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி உடன் இணைந்து பாடலை பாடியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் ரசிகர்கள் பாடல்கள் மூலம் பவதாரணி இன்னும் நம்முடன் தான் இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram