அப்போ எல்லாமே பொய்யா?.. உண்மையிலேயே பருத்திவீரன் படத்தின் தயாரிப்பாளர் இவர்தானா?.. வெளிவந்த முக்கிய ஆதாரம்..!! - cinefeeds
Connect with us

TRENDING

அப்போ எல்லாமே பொய்யா?.. உண்மையிலேயே பருத்திவீரன் படத்தின் தயாரிப்பாளர் இவர்தானா?.. வெளிவந்த முக்கிய ஆதாரம்..!!

Published

on

தமிழ் சினிமாவில் இயக்குனராகத் திகழும் அமீர் மௌனம் பேசியதே திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமானபோது சூர்யா கேரியரில் அது முக்கியமான படமாக அமைந்தது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து ஜீவா ஹீரோவாக நடித்த ராம் திரைப்படத்தை அமீர் இயக்கி இருந்தார். பின்னர் இவர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படம் இந்திய திரை உலகை திரும்பி பார்க்க வைத்தது. கார்த்தி ஹீரோவாக அறிமுகமான இந்த படம் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது என்று கூறலாம்.

தற்போது பருத்திவீரன் திரைப்படம் வெளியாகி பதினாறு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில் இந்த பட விவாகரத்தில் இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையே ஆன மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதாவது ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் பருத்திவீரன் திரைப்படத்தை தயாரிப்பதாக சொன்ன ஞானவேல் ராஜா அமீருக்கு முழு பணத்தையும் திருப்பி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற வருவதாக சமீபத்தில் அமீர் கூறினார்.

Advertisement

அந்த சமயத்தில் ஞானவேல் ராஜா மீது அவர் குற்றம் சாட்டியிருந்த நிலையில் பருத்திவீரன் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது ஞானவேல் ராஜா பாதியில் இருந்து விலகி விட்டதாகவும் அதன் பிறகு கடன் வாங்கி தான் படத்தை முடித்ததாகவும் அமீர் கூறி உள்ளார். ஆனால் இறுதியாக அவரிடம் பருத்திவீரன் பட உரிமையை ஞானவேல் ராஜா மிரட்டி வாங்கியதாகவும் தகவல் வெளியானது. இந்த சம்பவம் தொடர்பாக ஞானவேல் ராஜா அமீர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

அதாவது அமீர் ஒரு திருடன் என்றும் அவரால் யாருக்கும் பிரயோஜனம் இல்லை எனவும் கூறினார். மேலும் பருத்திவீரன் திரைப்படம் தொடர்பான அனைத்து ஆதாரங்களும் தன்னிடம் இருப்பதாக ஞானவேல் ராஜா கூறி இருந்த நிலையில் அமீருக்கு நியாயம் வேண்டும் என்று கூறி பிரபலங்கள் பலரும் குரல் கொடுத்தனர். இந்த நிலையில் பருத்திவீரன் திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழை twitter பக்கத்தில் பிஸ்மி வெளியிட்டுள்ளார்.

Advertisement

அதில் தயாரிப்பாளர் பெயரில் ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் பெயர் இல்லை, அதற்கு பதிலாக அமீரின் டீம் ஒர்க் ப்ரொடக்ஷன் ஹவுஸ் பெயர் தான் உள்ளது. ஆனால் ஞானவேல் ராஜா பருத்திவீரன் திரைப்படத்தை அவர்தான் தயாரித்ததாக கூறியிருந்தார். இந்த பதிவு தற்போது வைரலாகி வர இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் ஞானவேல் ராஜாவிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

 

Advertisement

Advertisement