LATEST NEWS
கோடி கோடியா கொடுத்தாலும்…. “அந்த மாதிரி காட்சிகளில் நான் நடிக்கவே மாட்டேன்”…. ராமராஜன் பளிச் பேட்டி…!!!
500 கோடி கொடுத்தாலும் சிகரெட், சரக்கு அடிக்கும் காட்சிகள் போன்றவற்றில் நடிக்க மாட்டேன் என்று நடிகர் ராமராஜன் பேசியிருக்கின்றார். தமிழ் சினிமாவில் 80-களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் ராமராஜன். மக்கள் திலகம் எம்ஜிஆரின் தீவிர ரசிகரான ராமராஜன் சினிமாவில் நடிக்க தொடங்கி பல படங்களை இயக்கியும் நடித்தும் இருக்கின்றார். அதிலும் எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன் உள்ளிட படங்களிலும் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது .
கங்கை அமரன் இயக்கத்தில் கரகாட்டக்காரன் படத்தில் ராமராஜன் கரகத்தை தலையில் வைத்து நடனமாடியதெல்லாம் இன்னும் நினைவில் இருக்கின்றது. தொடர்ந்து படங்களில் நடித்து வந்த ராமராஜன் அதன் பிறகு திரைத்துறையை விட்டு விலகினார். சமீபத்தில் இவர் சாமானியன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் ராமராஜன், ராதாரவி, எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்து இருக்கிறார்கள்.
இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருக்கின்றார். சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் செய்தியாளர்கள் கேள்விக்கு ராமராஜன் பதில் அளித்து இருந்தார். நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன். இல்லையென்றால் நடிக்க மாட்டேன் என்று இப்பவும் இருக்கிறீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராமராஜன் ஹீரோயீசமான கதை என்றால் நடிப்பேன்.
ஹீரோ என்றால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். நல்ல விஷயங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். எல்கேஜி திரைப்படத்தில் நடிப்பதற்கு ஆர் ஜே பாலாஜி அழைத்தார். பார்ட்டி திரைப்படத்தில் நடிப்பதற்கு கூட வெங்கட் பிரபு அழைத்தார். நான் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டேன். 500 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தாலும் சிகரெட் மற்றும் சரக்கு காட்சிகளில் நடிக்கவே மாட்டேன் என்று ராமராஜன் பேசியிருக்கிறார்.