கால்சென்டர் வேலை அவருக்கு பக்காவாக இருக்கும்… ஏன் தெரியுமா?…. விஜய் தேவர்கொண்டாவை கலாய்த்த ராஷ்மிகா…!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

கால்சென்டர் வேலை அவருக்கு பக்காவாக இருக்கும்… ஏன் தெரியுமா?…. விஜய் தேவர்கொண்டாவை கலாய்த்த ராஷ்மிகா…!!!

Published

on

விஜய் தேவரகொண்டா மற்றும்  நடிகை ராஷ்மிகா மந்தனா காதலிப்பதாக பல வதந்திகள் பரவி வந்தது. இது உண்மை என்று பலரும் கூறுகிறார்கள். விஜய்யை காதலிப்பதை ராஷ்மிகா  உறுதி செய்யாவிட்டாலும் மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் விஜய் தேவர் கொண்டா தன் குடும்பத்தை மட்டுமே மிகவும் நேசிப்பதாக கூறி வருகிறார்.

இந்த நிலையில் பாலிவுட் ஹீரோயின் நேஹா துபியாவின் வலையொலியில் கலந்து கொண்ட ராஷ்மிகா மந்தனாவிடம், விஜய் தேவர் கொண்டாவை பற்றி சிறந்த விஷயம் மற்றும்  மோசமான விஷயம் எது என்று கேட்கப்பட்டது . அதற்கு அவர் பதில் அளித்ததாவது நானும் விஜய் தேவர் கொண்டாவும் மிடில் கிளாஸ் குடும்பத்திலிருந்து வந்தவர்கள் .நாங்கள் இருவரும் யோசிக்கும் விதம் ஒரே போல் இருக்கும் இதுதான் சிறந்த விஷயம் என்று ராஷ்மிகா  கூறியிருக்கிறார்.

Advertisement

விஜய் தேவர் கொண்டா எப்பொழுதும் எல்லா விஷயத்திலும் ரொம்ப தீவிரமாக இருப்பார். எப்பொழுதும் அவர் வேலை  வேலை, வேலை என்று இருப்பார். அவர் பிரீயாக இருந்து நான் எப்பவும் பார்த்ததே இல்லை என்றார் ராஷ்மிகா. ராக்கெட் மாதிரி இருப்பார். இதுதான் அவரிடம் இருக்கும் மோசமான விஷயம் என்று ராஷ்மிகா  பதில் அளித்துள்ளார். இதை வைத்து ராஷ்மிகா விஜய் தேவர்கொண்டா தாராளமாக கால் சென்டரில் வேலை பார்க்கலாம். ஏனென்றால் அவர் எப்பொழுதும் மொபைலில் பேசிக் கொண்டே தான் இருப்பார்.

மேலும் அவர் நல்ல தெரபிஸ்ட் ஆகவும் இருக்கலாம். ஏனென்றால் அவர் கெரியர் பற்றி நல்ல அறிவுரைகளை கூறுவார். நீங்கள் விஜய் தேவர்கொண்டவை செல்லப் பெயர் வைத்து எப்படி அழைப்பீர்கள் என்று கேட்டதற்கு, விஜூ என்று அழைப்பேன் என்றார் ராஷ்மிகா. விஜய் தேவர்கொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் தற்போது அமீரகத்தில் இருப்பதாக மக்களால் பேசப்பட்டு வருகிறது. இருவரின் சோசியல் மீடியா போஸ்ட்களை பார்த்து ரசிகர்கள் விஜய்யும் ராஷ்மிகாவும் ஜோடியாக அமீரகத்தில் இருக்கிறார்கள் என்று கூறி வருகிறார்கள்.

Advertisement

ராஷ்மிகா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அதனால் அவருடன் இருப்பதற்கு விஜய் தேவர்கொண்டா இப்படி பிளான் போட்டதாக ரசிகர்கள் பேசிக்கொண்டு வருகிறார்கள். இதனிடையே பரசுராம் டைரக்ஷனில் விஜய் தேவர்கொண்டா நடித்த ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் இன்று அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகியுள்ளது. ஃபேமிலி ஸ்டார் படத்தில் விஜய் தேவர்கொண்டாவுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்திருக்கிறார்.

Advertisement