நீயா..! நானா..!!”மோதி பத்திக்களாம் நயன்தாராவுக்கு எதிராக”..?அதே பிஸ்னஸ் கையில் எடுக்கும் தமன்னா..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

நீயா..! நானா..!!”மோதி பத்திக்களாம் நயன்தாராவுக்கு எதிராக”..?அதே பிஸ்னஸ் கையில் எடுக்கும் தமன்னா..!!

Published

on

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னாடி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை தமன்னா. இவர் 2006 ஆம் ஆண்டு வெளியான ‘கேடி’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் ‘கல்லூரி’ என்ற  படத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். அதன் பிறகு சிறுத்தை, வீரம், தர்மதுரை, தேவி, ஸ்கெட்ச்,  சுறா உள்ளிட்ட பல படங்களில்  நடித்துள்ளார்.

#image_title

தற்போது நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் nu kaavaalaa  என்ற பாடலில் மட்டும் வந்து நடனமாடி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளார். நடிகை தமன்னா தற்போது வெப் சீரியஸ்களில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.ஹிந்தி நடிகர் விஜய் வர்மா உடன் காதலில் இருந்து வருவதும் அதற்கு ஒரு முக்கிய காரணம்.

#image_title

இவர் சோசியல் மீடியாவில்  ஆக்டிவாக இருக்க கூடியவர் தற்போது இவர் ஒரு புகைப்படத்தை வெளிட்டுள்ளார்.தற்போது நடிகை தமன்னாவுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் ஒன்று கிடைத்துள்ளது. ஜப்பானின் புகழ்பெற்ற அழகு சாதன நிறுவனமான ஷிசிடோவின் இந்திய தூதராக தமன்னா நியமிக்கப்பட்டு உள்ளார்.

#image_title

இதன்மூலம்  ஷிசிடோவின் முதல் இந்திய தூதர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகி உள்ளார் தமன்னா. இதனால் அவருக்கு வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.இது குறித்து இன்ஸ்டாவில் கருத்து தெரிவித்துள்ள தமன்னா,

#image_title

100 ஆண்டுகளுக்கு மேலாக தங்களது தரத்தை பராமரித்து வரும் ஷிசிடோ நிறுவனத்துடன் இணைந்திருப்பதில் தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், அழகு என்பது வெளிப்புற தோற்றமல்ல, தன்னம்பிக்கை மற்றும் அதிகாரம் பெறுவதும் கூட என, தான் நம்புவதாக கூறியுள்ளார்.இதை பார்த்த பலரும் நயன்தாராவுக்கு போட்டியாக தமன்னாவும் வந்து விட்டார் என்று கூறி வருகிறார்கள்.

சமீப காலமாக படங்களில் மட்டும் இல்லாமல் அழகு சாதனம் பொருட்கள் தயாரிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார் நடிகை  நயன்தாரா. சமீபத்தில் தான் இவரின் நயன் ஸ்கின் என்கின்ற புது நிறுவனம் தொடங்கப்பட்டது. இது தொடர்பான பிரமோஷன் பணிகளில் கூட அவர் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு போட்டியாக தமன்னா இறங்கி இருக்கிறார் என பலரும் கூறி வருகிறார்கள்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in