LATEST NEWS
விரைவில் சந்திக்கலாம்… ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ புது தனம் இவர் தானா…? அவரே வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு…
90 களில் வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ராதிகா சரத்குமார். இவரது தங்கைதான் நடிகை நிரோஷா ராம்கி. இவர் தமிழில் ‘அக்னி நட்சத்திரம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதைதொடர்ந்து அவர் செந்தூரப்பூவே, சூரசம்காரம், பட்டிக்காட்டுத்தம்பி, என் கணவர், கைவீசம்மா கைவீசு, சொந்தக்காரன், பொறுத்தது போதும்,
பாண்டி நாட்டு தங்கம், இணைந்த கைகள், பறவைகள் பலவிதம், மருதுபாண்டி, காவலுக்கு கெட்டிக்காரன், மைந்தன், பாரம்பரியம், சிலம்பாட்டம், படிக்காதவன் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இறுதியாக இவர் ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். வெள்ளித் திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் கால் பதித்து கலக்கி வருகிறார் நடிகை நிரோஷா.
இவர் நடிகர் ராம்கியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் சினிமா வாழ்க்கையிலிருந்து கொஞ்சம் தள்ளி இருந்த நடிகை நிரோஷா ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அவர் பல சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். தற்போது இவர் வெள்ளித்திரை, சின்னத்திரை என பிசியாக கலக்கி கொண்டு வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை நிரோஷா. இவர் தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இறுதி கட்டத்தை எட்டியுலா பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார் இது தொடர்பான அறிவிப்பை அதிகாரபூர்வமாக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் நேற்று விஜய் டிவியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலுக்கான ப்ரோமோவை வெளியிட்டிருந்தது. இதோ அந்த பதிவு…
View this post on Instagram