LATEST NEWS
ஜீவானந்தத்துக்கு ஸ்கெட்ச் போடும் கதிர்…. ஜனனிக்கு அப்பத்தா கொடுத்த பொறுப்பு ….வைரலாகும் எதிர்நீச்சல் பிரமோ….

இன்றைய காலகட்டத்தில் சின்ன திரையில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘எதிர்நீச்சல் சீரியலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த சீரியலில் தற்போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான செய்திகள் வெளியாகி வருவது. இந்நிலையில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் மாரிமுத்து.
இவர் அண்மையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.அவரது இறப்பு திரையுலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் அந்தக் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் அந்த கதாபாத்திரத்தில் பிரபல நடிகரும் மற்றும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி நடிக்க இருப்பதாக கூறிஅவருக்கான மாஸ் புரமோவும் வெளியிடப்பட்டது.
நடிகர் மாரிமுத்துக்கு மக்கள் மத்தியில் கொண்டு சென்ற வார்த்தை என்றால்’ஏம்மா ஏய்’. தற்போது வேல ராமமூர்த்தி ‘இளந்தாரி பயலுக’ என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகிறார்.நடிகர் வேலராம மூர்த்தியால் தொடர்ச்சியாக சீரியலில் வரமுடியவில்லை.
முன்னதாக இந்த சீரியலிலில் கமிட் ஆகும் போதே தனக்கு சினிமா வாய்ப்புகள் இருப்பதாக கூறியிருந்தார்.இந்த நிலையில் அவர் இல்லாமல் கதையை நகர்த்த படக்குழு முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றன. அதனால் ஆதியின் பிரசன்ஸ் இன்றைய எபிசோடில் இருக்குமா என்பது தெரியவில்லை.
இன்றைய நிகழ்ச்சிக்கான புரமோ வெளியாகி இருக்கிறது. இன்றைய புரமோவில் ஜீவானந்தத்தை ஈஸ்வரி சந்திக்க செல்கிறாள். அவரிடம் என்ன என்று ஜீவா கேட்க, அதற்கு ஈஸ்வரி இல்லை..பேச வேண்டும் என்று தோன்றியது என்று சொன்னார்.
இன்னொரு பக்கம் கதிர் ஜீவானந்தம் தானாக வந்து வலையில் சிக்கி இருக்கிறான். அவனை அப்படியே முடித்து விட்டு விட வேண்டும் என்று கொந்தளிக்கிறான். இதனிடையே அப்பத்தா நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருப்பதாகவும் அதற்கு ஜனனிதான் தலைமை தாங்கப்போவதாக சொல்கிறார். இதில் மாரிமுத்துவின் கதாபாத்திரமே இடம் பெறவில்லை.