BIGG BOSS
‘மனசுக்குள்ளே காதல் வந்துச்சா வந்துச்சா’ மணித்தோளில் சாய்ந்த ரவீனா…. பொறாமையில் ஐஷு…

தற்போது’ பிக் பாஸ் சீசன் 7′ விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஒளிபரப்பாகி வருகிறது இந்நிலையில் இந்த வாரம் தலைவராக நடிகர் விக்ரம் இருந்த நிலையில் பல சுவாரசியமான விஷயங்கள் சண்டைகள் வாக்குவாதங்கள் என மிகவும் விறுவிறுப்பாக இந்த இரண்டு நாட்கள் சென்ற நிலையில் பிக் பாஸ் சீசனுக்கு சீசன் ஒரு ஜோடி காதல் செய்வது போல காட்டப்படும் அந்த வரிசையில் இந்த சீசனில் சிக்கியிருப்பது மணி மற்றும் ரவீனா.

#image_title
சில நாட்களுக்கு முன்பதாக இவருக்குள் காதல் தீ பற்றி கொண்டது கொஞ்சம் வெளிப்படையாக தெரிந்தது. தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வந்த எபிசோடுகளிலும் இருவர்களுக்கு இடையே கெமிஸ்ட்ரி நன்றாக அமைந்துவிட பிக் பாஸ் கேமராக்கள் அவர்கலேயே வட்டமடித்து காண்பித்தனர் சக போட்டியாளர்களுக்கு அவர்களிடம் என்ன உங்களுக்கு இடையே சம்திங் சம்திங் என்று கேட்கவும் ச்சே நாங்க வெறும் ஃப்ரண்ட்ஸ்தான் என்று சொல்லி தப்பித்துக்கொள்வது போல நடித்தார் ரவீனா.

#image_title
இதற்கிடையே பிரதீப் வழக்கம் போல் இவர்கள் இருவரையும் நோண்ட இந்த விஷயம் குறித்து இனி கிண்டல் அடிக்க வேண்டாம் மணி நேராக சொல்லிவிட்டார். இதை அடுத்து பிரதீப் இனி உங்களை பற்றி பேசவே மாட்டேன் என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டார். இந்நிலையில் நேற்றைய தினம் ஐஸ்வர்யா இந்த விஷயத்தை குறித்து ரவீனாவை நோண்டி நொங்கெடுத்து, வெளிப்படையாக ரவீனாவின் காதலை வெளியே கொண்டு வர முயற்சி செய்தார்.

#image_title
இதில் சுதாரித்துக்கொண்ட ரவீனா இந்த டாப்பிக்கை பற்றி பேச வேண்டாம் என்று சொல்லி ஓடி விட்டார். இந்த விவகாரம் மணியிடம் சென்றது. மணியிடம் ரவீனா, நமக்குள் மூன்றாவது நபரை விடக்கூடாது என்று என்னிடம் சொல்கிறீர்கள் அல்லவா, அதை நீங்களும் கடைபிடியுங்கள் என்று கூற , நான் அந்த விஷயத்திற்கு சாரி கேட்டு விட்டேனே. என்று மணி கதற, அவரது தோளில் சாய்ந்து கொண்டார் ரவீனா.

#image_title
அதனை தொடர்ந்து ஐஸ்வர்யாவிடம் சென்ற மணி இனி இதைப்பற்றி பேசவே பேசாதே என எச்சரித்தார். தொடர்ந்து ரவீனா உங்களின் தோழி என்பதற்காகவெல்லாம் நான் பேசுவதையெல்லாம் பொறுத்து போக முடியாது என கூறினார் . அதனைத்தொடர்ந்து பிரதீப் ரவீனாவிடம், நீ மணியிடம் நெருங்கி பழகுவது ஐஸ்வர்யாவிற்கு பொறாமை ஏற்படுத்துவது போல தெரிகிறது என திரியை பற்ற வைத்தார்.

#image_title

#image_title