BIGG BOSS
இந்த வாரம் பிக்பாஸ் எவிக்ஷன் இவரா?.. அந்த மாதிரி போஸ்ட் போட்டு கிண்டலடித்த பிரதீப்.. யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிலையில் 18 பேர் வீட்டுக்குள் நுழைய அடுத்ததாக வைல்டு கார்டு என்றி மூலமாக 5 பேர் வீட்டுக்குள் சென்றனர். இவர்களில் இதுவரை பவா செல்லதுரை, அனன்யா ராவ், விஜய் வர்மா, வினுஷா, யுகேந்திரன், அன்ன பாரதி, கானா பாலா, ஐசு மற்றும் ஆர் ஜே ப்ராவோ உள்ளிட்டோர் வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டன. அதேசமயம் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு பிரதீப் பிக் பாஸ் தொடர்பாக பல பதிவுகளை பகிர்ந்து வரும் நிலையில் தற்போது தன்னுடைய twitter பக்கத்தில் கூலான போஸ்ட்களை போட்டுக் கொண்டிருக்கிறார். அதன்படி தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதீப் ஒரு நாய்க்குட்டியுடன் புகைப்படத்தை வெளியிட்டு அதற்கு ஜோஜோ என கேப்ஷன் கொடுத்துள்ளார். இதனால் ஜோவிகா தான் இந்த வாரம் வெளியேறப் போகிறாரா? இதனால்தான் பிரதீப் இப்படி அழைக்கிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
Jojo 💜 pic.twitter.com/Zkc47hr6sV
— Pradeep Antony (@TheDhaadiBoy) December 1, 2023
இதனைத் தொடர்ந்து இன்று தனது twitter பக்கத்தில் ஒரு நாய் போட்டோவை கூட நிம்மதியா போட விட மாட்டேன் என்கிறார்களே என்று இன்னொரு போஸ்டையும் பிரதீப் போட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் ராசுகுட்டி அட்டாக் என அவரது நாய்க்குட்டி அவருடன் விளையாடும் ஒரு வீடியோவையும் பிரதீப் பகிர்ந்து உள்ளார். அதில் ராசுக்குட்டி என குறிப்பிடப்பட்டிருப்பது சரவணன் விக்ரம் என கிசுகிசுக்கப்படும் நிலையில் ஒருவேளை சரவணன் விக்ரம் இந்த வாரம் வெளியேறலாம் எனவும் கூறப்படுகிறது. இருந்தாலும் இந்த வாரம் ஜோவிகா வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Rasukutty attack 💜 pic.twitter.com/HbIlwiUDtp
— Pradeep Antony (@TheDhaadiBoy) December 1, 2023