BIGG BOSS
வைல்ட் கார்டு போட்டியாளராக களமிறங்க போவது… விஜே அர்ச்சனாவும் ,கானா பாலாவுமா… மிகுந்த எதிர்பார்ப்பில் பிக் பாஸ் ரசிகர்கள்…!
விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. இதுவரை 6 சீசன்கள் முடிவடைந்த நிலையில், 7வது சீசன் கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கியது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த ரியாலிட்டி ஷோ நாளுக்கு நாள் பல திருப்பங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், இந்த வார இறுதியில் ஐந்து பிரபலங்கள் வைல்டு கார்டு போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் வைல்ட் கார்டு போட்டியாளராக யார் உள்ளே நுழைவார்கள் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. அதன்படி வி.ஜே.அர்ச்சனா, கானா பாலா, கே.பி.ஒய்.பாலா, மானசி கண்ணன், சாம் சாமுவேல் ஆகியோர் களமிறங்குவதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. வைல்டு கார்டு போட்டியாளர்கள் அக்டோபர் 29-ம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், ரசிகர்களின் வாக்குகளின் அடிப்படையில் கடந்த வாரம் விஜய் வர்மா நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டது பெரிய திருப்பமாக அமைந்தது. இவரது வெளியேற்றம் ஹவுஸ்மேட்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதில் கூல் சுரேஷ் கண்ணீருடன் அவரை அனுப்பினார்.முதல் வாரத்தில், அனன்யா எஸ் ராவ், அதைத் தொடர்ந்து பாவா செல்லத்துரை தானே வெளியேறினார்.
இதையடுத்து 3வது நபராக விஜய் வர்மா வெளியேற்றப்பட்டுள்ளார். தற்போதைய நிலவரப்படி, நிக்சன், பிரதீப் ஆண்டனி, வினுஷா, விஷ்ணு, கூல் சுரேஷ், ஜோவிகா விஜயகுமார், மணிச்சந்திரா, யுகேந்திரன், அக்ஷயா உதயகுமார், மாயா கிருஷ்ணன், சர்வணா விக்ரம் உள்ளிட்ட 11 போட்டியாளர்கள் இந்த வாரம் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இந்த வார இறுதியில் யார் வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது.