#image_title

தமிழ் சினிமாவில் இன்று சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் பட்டாலும் ஏராளம்.

அதிலும் குறுகிய காலகட்டத்தில் சின்னத்திரையில் நுழைந்து இன்று நடிகையாகும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகைகள் பலரும் உள்ளனர்.

அப்படி ஒருவர் தான் அர்ச்சனா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்தவர் தான் விஜே அர்ச்சனா.

சென்னையை சேர்ந்த இவர் சென்னையிலேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார்.

இன்ஜினியரிங் பட்டதாரியான இவர் சினிமாவின் மீது கொண்ட ஆசையால் சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.

அதன் மூலம் கவனத்தை ஈர்த்த அர்ச்சனா விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அதனைத் தொடர்ந்து ஆதித்யா சேனலில் தொகுப்பாளராக பணியாற்றினார்.

மறுபக்கம் சமூக வலைத்தளங்களிலும் அதிக கவனம் செலுத்தி வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

இதன் மூலமாக இவருக்கு விஜய் டிவி சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் தற்போது ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் இவர் ஈர்த்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் விஜய் டிவியின் முரட்டு சிங்கிள், கலக்கல் ராஜா மற்றும் கில்லாடி ராணி உள்ளிட்டா பல நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்று வருகின்றார்.

இவர் சமீபத்தில் ராஜா ராணி சீரியலில் இருந்து விலகினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இவர் சீரியலில் இருந்து விலகியதாக பல செய்திகள் உலா வந்த நிலையில் இதுவரை இவர் சீரியலை விட்டு விலகியதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.

அதேசமயம் இவர் சமீபத்தில் தான் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தார்.

தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அர்ச்சனா தொடர்ந்து கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் அவரின் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.