விஜய் டிவியில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான சீரியல் ஒன்று தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் ஒரு முடிவே இல்லாமல் ஓடிக்கொண்டிருந்த நிலையில் தயவுசெய்து சீரியலை முடியுங்கள் என ரசிகர்கள் கெஞ்சும் வரை தொடர் ஒளிபரப்பாகி வந்தது.

ஒரு வழியாக சீரியல் முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாவது சீசன் புதிய நடிகர்கள் நடிக்க தொடங்கியுள்ளனர். ஆனால் பாரதி என்ற கதாபாத்திரத்தில் நடித்த அருண் இரண்டாவது பாகத்திலும் நடித்திருக்கலாம் என பலரும் கூறி வருகின்றனர். அதனைப் போலவே ராஜா ராணி 2 என்ற சீரியலில் ஆரம்பத்தில் அர்ச்சனாவாக நடித்தது தொகுப்பாளினி அர்ச்சனா.

ஆனால் அவர் பாதியிலேயே அந்த சீரியலை விட்டு விலகினார். இதனிடையே பாரதியாக சீரியலில் நடித்த அருண் பிரசாந்த் மற்றும் ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக நடித்த அர்ச்சனா இருவரும் காதலித்து வருவதாக பல செய்திகள் இணையத்தில் உலா வந்தன. ஆனால் அது தொடர்பாக இருவரும் எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை.

இந்நிலையில் இருவரும் ஒரு இடத்திற்கு போட்டிங் சென்ற வீடியோவை வெவ்வேறு விதமாக எடிட் செய்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட அப்படியும் இருவர் ஒன்றாகச் சென்றிருக்கலாம் என வீடியோ மூலம் கண்டுபிடித்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Arun Prasath இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@arun_actor)

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Archana R இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@vj_archana_)