தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளின் ஒருவராக வளம் வருபவர் தான் நடிகை அபிராமி. கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற நியூஸ் தமிழ்நாடு மாடலிங் போட்டியில் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றவர்.

அதன் மூலமாக வெப் சீரிஸில் வைத்து வந்த அபிராமி ஆல்பம் பாடல்களிலும் நடித்துள்ளார்.பின்னர் 2019 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியிருந்தார்.

அந்த படம் வெளியாவதற்கு முன்பே பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற ஐந்தாவது ரன்னர் அப் இடத்தை பெற்றார்.

இந்நிலையில் உடலின் பல பகுதிகளில் டாட்டூ குத்தியுள்ள பல புகைப்படங்களை அபிராமி பகிர்ந்து உள்ளார். இதனைப் பார்த்த பலரும் கண்டபடி கருத்துக்களை பதிவிட்டு புகைப்படங்களை வைரலாக்கி வருகிறார்கள்.