தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவர்தான் ஹேமா.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்தார்.
அதனைத் தொடர்ந்து பொன்னூஞ்சல், தென்றல், சின்னத்தம்பி, குலதெய்வம் மற்றும் மெல்ல திறந்தது கதவு போன்ற பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார்.
சீரியல்களில் மட்டுமல்லாமல் ஆறாவது சினம், சவரக்கத்தி, வீரையன், இவன் யார் என்று தெரிகிறதா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இருந்தாலும் இவருக்கென தனி ஒரு பெயரையும் புகழையும் வாங்கித் தந்தது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தான்.
இந்த சீரியலில் ஜீவாவின் மனைவி மீனா கதாபாத்திரத்தில் நடித்த ஹேமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார்.
இன்று இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் Hema’s diary என்ற பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.
இதில் பியூட்டி டிப்ஸ்,அழகு சாதன பொருட்கள் தொடர்பான விளம்பரங்கள் என தொடர்ந்து பல வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
இவர் ராஜ்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு சாத்விக் என்ற ஒரு மகனும் உள்ளார்.
தற்போது ஹேமாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.