BIGG BOSS
ஒரே டார்ச்சர்! தூக்கம் வரல பாதுகாப்பு இல்ல பிக்பாஸ் வீடு?சக போட்டியாளர்..!!

விஜய் டிவியில் அக்டோபர் 1ஆம் தேதி பிக் பாஸ் சீசன் 7 ஆவது தொடங்கப்பட்டது இந்நிலையில் தற்போது பிக் பாஸ் ஆரம்பித்து 5 நாட்கள் முடிவடைந்துள்ளது. இந்த சீசனில் பல பிரபலங்கள் போட்டியாளராக கலந்துள்ளனர். நடிகர் கவின் நண்பர் மற்றும் நடிகரான பிரதீப் இப்போட்டியில் கலந்துள்ளார்.
நேற்றைய எபிசோடில் பிக் பாஸ் கடனை திருப்பி அடைக்க வெயிட் டாஸ்க் ஒன்றை கொடுத்தார். அதில் தோற்று விட்டால் வீட்டில் இருக்கும் மேக்கப் பொருட்கள் எல்லாம் எடுத்துச் செல்லப்படும் என அறிவித்தார் பிக் பாஸ். நாம் தோற்றுவிடலாம் பெண்கள் மேக்கப் இல்லாமல் அசிங்கமாக இருப்பார்கள் அவர்கள் சோவில் ஜொலிக்க முடியாது எனப் பிரதீப் கூறினார்.
இதை கேள்விப்பட்ட பெண் போட்டியாளர்கள் பூர்ணிமா உள்ளிட்ட சிலர் பிரச்னையை எழுப்பி இருக்கின்றனர். கமல் வரும் போது கூட இது பற்றிய விவாதம் பெரிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் பிரதீப் ஒரு மற்றொரு போட்டியாளரிடம் பேசும் போது எனக்கு தூக்கம் வரவில்லை எனக்கு பிக் பாஸ் வீடு பாதுகாப்பாக உணரவில்லை என்னை சுற்றி சாவடிக்கிற ஆட்கள் தான் இருக்கிறார்கள் என கூறி இருக்கிறார்.