BIGG BOSS
பிக் பாஸ் வீட்டிலிருக்கும் நாங்கள் எப்படி சாப்புடுறோம்…? கேமரா முன்பு உண்மையை உளறிய கூல் சுரேஷ்…! வைரலாகும் வீடியோ…!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். இதுவரை ஆறு சீசன்கள் நடந்து முடிந்திருக்கின்றன. தற்பொழுது 7 வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு ஆனாலே மற்ற சேனல்களின் டிஆர்பி ரேட்டிங் அடிவாங்கும் நிலை உருவாகும். எனவே அதனை தக்க வைப்பதற்காக இந்த சீசனில் பல புது முயற்சிகளை சேனல் நிர்வாகம் கையில் எடுத்துள்ளது. அதன்படி இந்த முறை இரண்டு வீடுகளில் போட்டி நடக்கவிருக்கிறது.
இரண்டு வீடுகளில் நடக்கவிருக்கும் இந்த சீசனின் முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் வீட்டுக்குள் நுழைந்தார். அவரை கமல் ஹாசன் வாழ்த்தி அனுப்பிவைத்தார்.இதைத்தொடர்ந்து அவருக்கே முதலில் கேப்டன் பதவியும் வழங்கப்பட்டது. தற்பொழுது இந்த வார கேப்டனாக விஜய் செயல்பட்டு வருகிறார். கலந்துகொண்ட 18 போட்டியாளர்களுக்கு மத்தியில் பல பிரச்சனைகளும், சண்டைகளும் அரங்கேறி வருகிறது.
இன்று பிக் பாஸ் வீட்டின் கேமரா முன் நின்று கூல் சுரேஷ் கூறிய விஷயமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது அவர் ‘தன் குழந்தைகளிடம் அம்மா சொல்வதைக் கேட்டு நடக்கும் படியாகவும், பள்ளிக்கு உரிய நேரத்தில் செல்லும்படியும், பார்வையாளர்கள் நினைப்பது போல் சாப்பாடு வெளியில் வருவதில்லை நாங்களே தான் சமைத்து சாப்புடுகிறோம் என்றும் கேமரா முன்பு கூறினார் கூல் சுரேஷ். அவரின் இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ….
#CoolSuresh தன் குழந்தைகளிடம் அம்மா சொல்வதைக் கேட்டு நடக்கும் படியாகவும் பார்வையாளர்கள் நினைப்பது போல் சாப்பாடு வெளியில் வருவதில்லை அவர்கள்தான் சமைப்பார்கள் என்று சொல்கிறார்#BiggBossTamil7 pic.twitter.com/rx6FNVZ6wm
— BBTamilVideos (@BBTamilVideos) October 3, 2023