BIGG BOSS
BIG BOSS-ல் பெண் போட்டியாளர் தாக்கப்பட்டாரா…? விஷ்ணு மற்றும் நிக்சன் வாக்குவாதம் … கலவரத்தில் பிக் பாஸ் வீடு …?

விஜய் தொலைக்காட்சியில் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7 அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்து தொடங்கப்பட்டது. இதில் கூல் சுரேஷ், வினுஷா, பிரதீப் ஆண்டனி, ரவினா தாஹா, விஷ்னு, விஜய், மாயா, எஸ். கிருஷ்ணன், விசித்ரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை, மணி சந்திரா, அனன்யா உள் பட மொத்தம் 18 பேர்பங்கேற்றனர்.
இதுவரை அனன்யா மற்றும் விஜய் இப்போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் பவா செல்லத்துரை தனது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தானாக முன்வந்து வீட்டில் இருந்து வெளியேறினார். இச்சூழலில் கேப்டன் பூர்ணிமாவால் ஸ்மால் பாக்ஸ் வீட்டிற்கு யுகேந்திரன், பிரதீப், நிக்சன், மணி மற்றும் அக்சயா ஆகியோர் அனுப்பப்பட்டனர். இவ்வாறு இருக்கையில் நேற்று வெளியான முதல் பிரமோவில் இரு வீட்டாருக்கும் இடையே நடைபெற்ற டாஸ்க்கில் ஐஷுவின் காலில் அடிபட்டு அவர் விஷ்ணுவின் மேல் தவறுதலாக விழுந்த பிரமோ வெளியானது.
இதனால் இதனை தவறாக புரிந்து கொண்ட விஷ்ணு அக்சயா உடன் சண்டையிட முற்படுவது போன்றும், இதனை எதிர்க்கும் விதமாக நிக்சன் விஷ்ணுவிடம் எவ்வாறு பெண் போட்டியாளரை தாக்கலாம் என்று கேள்வி எழுப்புவது போன்ற வீடியோ இரண்டாவது பிரமோவாக வெளியானது. ஆனால் இந்த வீடியோவில் விஷ்ணு, அக்சயாவை தாக்கியது போன்ற எந்த பதிவும் அதில் இடம்பெறவில்லை.