அடிச்சா மூக்கும் வாயும் உடைஞ்சிரும்…! கலவரமாக மாறிய பிக் பாஸ் வீடு…! பரபரப்பான ப்ரோமோ இதோ…! - cinefeeds
Connect with us

BIGG BOSS

அடிச்சா மூக்கும் வாயும் உடைஞ்சிரும்…! கலவரமாக மாறிய பிக் பாஸ் வீடு…! பரபரப்பான ப்ரோமோ இதோ…!

Published

on

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியானது 6 சீசன்களை கடந்து ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன்  7 வது சீசன் தொடங்கியது. இதில் விசித்ரா, விஷ்ணு, வினுஷா தேவி, சரவணன், பாவா செல்லதுரை, கூல் சுரேஷ், ஆயிஷா உதயகுமார், ஜோவிகா, ஐஷு, பிரதீப் ஆண்டனி, மாயா கிருஷ்ணன், ரவீனா, யுகேந்திரன், மணி சந்திரா, விஜய் வர்மா, அனன்யா, பூர்ணிமா ரவி, நிக்சன் என 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில் விஜய் வர்மா இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். விஜய் வர்மாவை குறைவாக கவர்ந்த ஐஷு, நிக்சன், பாவா செல்லதுரை, அனன்யா, விணுஷா, ரவீனா ஆகிய 6 பேரும் இரண்டாவது பாதை வழியாக  small boss வீட்டிற்கு அனுப்பட்டுள்ளனர். இந்த வார எவிக்ஷனுக்கு சில போட்டியாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த தடவை பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது ஆரம்பமாகி ஒரு சில நாட்களிலேயே சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது.

Advertisement

[irp]

அந்தவகையில் பிக் பாஸ் ஆரம்பித்த நாளிலிருந்தே பிரதீப் வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் ஏதாவது பேசி மக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டு வருகிறார். இவருக்கும் விஜய்க்கும் சுத்தமாக ஒத்துப்போவதில்லை. இந்நிலையில் இன்றைய நாளின் முதல் ப்ரோமோ தற்பொழுது வெளியாகியுள்ளது. அதில் , விஜய் பிரதீப்பை பார்த்து ‘என்மேல ஷூவ இடிச்சிட்டு போனாரு பிரதீப், ஏன்னா திடீர்னு எனக்கு கோபம் வந்துரும்.நான் டப்புன்னு அடிச்சிட்டேன்னா மூக்கும் வாயும் உடைஞ்சிடும். என்மேல பாசமான பசங்க எல்லாம் வெளிய இருக்கானுங்க. நீங்க வெளிய போன அவ்ளோ தான் என்பது போல சைகை காட்டி கூறுகிறார்.

Advertisement

[irp]

அப்போது ‘விஜய் பேசியது கரெக்ட் தான்னு இங்க யாரையாவது சொல்ல சொல்லுங்க’ என பவா செல்லத்துரை கேள்வி எழுப்புகிறார். இதைத்தொடர்ந்து விஷ்ணு விஜயிடம் ‘நான் உன்ன இப்ப செருப்பால தட்டிட்டேன். எங்க நீ என்னை அடி ‘ என கேட்க ,’ நீ முதல செருப்பால தட்டி பாரு முதல’ என பாய்கிறார் விஜய் . இதற்கிடையே மாயா ‘உங்க பிரச்னையில எங்கள இழுக்காதீங்க எனக்கூற, ‘அவன் என்னை பத்தி தான் பேசிகிட்டு இருக்கான்’ என பிரதீப் கூறுகிறார். அனால் அசால்ட்டாக ‘போயா யோவ் ‘என கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார் மாயா. இவ்வாறு இன்றைய நாளின் முதல் ப்ரோமோ பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வெளிவந்துள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ…

Advertisement

[irp]

Advertisement
Continue Reading
Advertisement