BIGG BOSS
அடேங்கப்பா..! பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கமல் வாங்கிய சம்பளம் இவ்ளோவா..? அந்த நடிகருக்கு அப்புறம் ஆண்டவர் தான் டாப்..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இப்போது தான் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. பிக் பாஸ் 7 சீசர்களும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து க்கொண்டிருக்கின்றனர்.
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்தது. அந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா, ரவீனா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா, ஜோவிகா, அக்ஷயா உதயகுமார், மணிச்சந்திரா, விசித்ரா உள்ளிட்டோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இந்நிலையில் பல போராட்டங்களுக்கு பிறகு பிக் பாஸ் சீசன் 7 டைட்டிலை அர்ச்சனா வென்றார்.
7- வது சீசனில் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்த விவகாரத்தால் கமல்ஹாசன் மீது பல சர்ச்சைகள் எழுந்தது. ஆனாலும் அதையெல்லாம் அவர் ஒருபோதும் கண்டு கொள்வதில்லை. இதுவரை போட்டியாளர்களை ஊக்குவிக்கவும், தவறு செய்தால் கண்டிக்கவும் கமல் தவறியதில்லை.
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல்ஹாசன் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சீசன் 7 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல்ஹாசன் 13 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தெரிகிறது. பிக் பாஸ் சீசன் வரலாற்றில் சல்மான்கானுக்கு பிறகு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கும் நபராக உலக நாயகன் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.