BIGG BOSS
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு உண்மையை உடைத்த RJ ப்ராவோ.. அப்படி என்ன சொன்னார் தெரியுமா..??
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் மக்களுக்கு பரிச்சயமான பல போட்டியாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் சில வாரங்களுக்கு முன்பு ரெட் கார்டு கொடுத்து பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டார்.
அவர் வெளியேறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு 5 வைல்டு கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் நுழைந்தனர். அவர்களின் துபாயை சேர்ந்த ஆர்.ஜே ப்ராவோவும் ஒருவர். இவர் பிக் பாஸ் வீட்டில் அனைவரிடமும் ஜாலியாக இருக்க வேண்டும் என்று கூறி தனது விளையாட்டை தொடங்கினார். இருக்கும்போது பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
இதனை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலும் பல டாஸ்க் சண்டைகள் நடைபெற்றது. கடந்த வாரம் ஆர் ஜே ப்ராவோ மற்றும் அக்ஷயா இருவரும் எலிமினேஷன் செய்யப்பட்டனர். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு ஆர் ஜே ப்ராவோ வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் இன்னும் இரண்டு நாட்களில் என்னை டிடாக்ஸ் செய்ய ஹாங்காங் செல்கிறேன். அலாதியான அன்பையும் ஆதரவையும் அதிகமானோர் எனக்கு கொடுத்ததற்கு நன்றி சொல்கிறேன்.
என்னுடைய விளையாட்டில் நான் உண்மையாக இருந்தேன். அதை நீங்களும் புரிந்து கொண்டு உள்ளீர்கள். பணரீதியாக கொஞ்சம் சிரமத்தில் இருந்ததால் என்னால் அதிகமாக பேச முடியவில்லை. என்னிடம் இருக்கும் நல்ல விஷயங்கள் அந்த ஒரு மணி நேரம் எபிசோடில் வரவில்லை. இதனால் என் நல்ல விஷயங்கள் என் விளையாட்டில் பங்கு வகிக்கவில்லை. கூடிய விரைவில் உங்களிடம் அனைத்து விஷயங்களையும் சொல்கிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார். தற்போது அவரின் பதிவு வைரலாகி வர ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளது.