மக்கள் தீர்ப்பை தப்புன்னு சொல்ல நீங்க யார்…”காசு வாங்காமத்தான் விஜய்க்கு ஓட்டு போட்டாங்க…”90% இளைஞர்கள் எடுத்த அதிரடி முடிவு! – என் பேரன்கள்தான் நாட்டை ஆளப்போறாங்க என உருகிய சிவக்குமார்…!” – cinefeeds
Connect with us

LATEST NEWS

மக்கள் தீர்ப்பை தப்புன்னு சொல்ல நீங்க யார்…”காசு வாங்காமத்தான் விஜய்க்கு ஓட்டு போட்டாங்க…”90% இளைஞர்கள் எடுத்த அதிரடி முடிவு! – என் பேரன்கள்தான் நாட்டை ஆளப்போறாங்க என உருகிய சிவக்குமார்…!”

Published

on

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தவெக பெற்ற பெரும் வெற்றியைத் தொடர்ந்து, அதற்கு ஆதரவாகப் பிரபல மூத்த நடிகர் சிவக்குமார் பேசியுள்ள கருத்துக்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மக்கள் தீர்ப்பை எவரும் குறை சொல்ல முடியாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகள் மீதும் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே மக்கள் இந்த முறை விஜய்க்கு வாக்களித்துள்ளனர் என்றும், அவர் மக்களுக்கு நல்லது செய்வார் என நம்புவோம் என்றும் சிவக்குமார் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் வரலாற்றை நினைவுகூர்ந்து பேசிய சிவக்குமார், “கடந்த 1954-ல் நாட்டை ஆண்ட பெருந்தலைவர் காமராஜர், இறக்கும் போது வெறும் 140 ரூபாயும், சில உடைகளும், புத்தகங்களும் மட்டுமே வைத்துவிட்டுப் போனார்; அப்படிப்பட்ட உன்னதமான தலைவரையே அன்றைய மக்கள் தோற்கடித்தனர். அப்போது காங்கிரஸை வீழ்த்தி திமுக வெற்றி பெற்றபோது, தமிழ்நாட்டில் ‘விஷக்கிருமி’ பரவிவிட்டது என பக்தவச்சலம் விமர்சித்தார். ஆனால், அதே திமுக-தான் தமிழகத்தை இத்தனை ஆண்டுகள் ஆண்டது. தற்போது மக்களுக்கும், குறிப்பாக 90 முதல் 95 சதவீத இளைஞர்களுக்கும் மாற்றம் தேவைப்பட்டதால், அவர்கள் காசு வாங்காமல் மனப்பூர்வமாக விஜய்க்கு ஓட்டுப் போட்டுள்ளனர்” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

மேலும், எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், ஜெயலலிதா போன்ற மாபெரும் தலைவர்கள் சினிமாவில் இருந்து வந்தவர்கள் தான் என்பதையும், அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோர் சினிமாவில் வசனம் எழுதியவர்கள் என்பதையும் அவர் நினைவுபடுத்தினார். மற்றவர்களை விடக் கலைத்துறையினர் மக்களுக்கு நெருக்கமாக இருப்பதால் தான் இந்த ஆதரவு கிடைக்கிறது என்று கூறிய அவர், “என் பேரன் உள்ளிட்ட அடுத்த தலைமுறை இளைஞர்கள் ஒரு தலைவரைத் தேர்வு செய்யும்போது, மக்கள் தீர்ப்பைத் தவறு என்று சொல்ல நாம் யார்?” என அதிரடியாகக் கேள்வி எழுப்பினார். சிவக்குமார் இந்த விறுவிறுப்பான கருத்துக்களைப் பகிர்ந்தபோது, அருகில் இருந்த பிரபல நடிகர் சத்யராஜ் அதனைச் சிரித்தபடி ரசித்துக் கேட்டு, வழிமொழிந்தது அங்கே கூடியிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in