BIGG BOSS
“கேக்குறதுக்கு ஆள் இல்லன்னு ரொம்ப ஆடுறாரு”.. அடுத்த சீசன்ல வேலைக்காவாது.. கமல் பற்றி சர்ச்சை வீடியோ வெளியிட்ட வனிதா..!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிலையில் 18 பேர் வீட்டுக்குள் நுழைய அடுத்ததாக வைல்டு கார்டு என்றி மூலமாக 5 பேர் வீட்டுக்குள் சென்றனர். இவர்களில் இதுவரை பவா செல்லதுரை, அனன்யா ராவ், விஜய் வர்மா, வினுஷா, யுகேந்திரன், அன்ன பாரதி, கானா பாலா, ஐசு மற்றும் ஆர் ஜே ப்ராவோ உள்ளிட்டோர் வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டன.
அதேசமயம் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். ஏற்கனவே வெளியே போனவர்கள் உள்ளே வந்ததும் போட்டியும் சுவாரசியமாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த வாரம் வனிதாவின் மகள் ஜோவிகா வெளியேற்றப்படுவார் என்று கூறப்படுகிறது. இவர் பிக் பாஸ் வீட்டில் நுழைந்த போது சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது இவர் வெளியேற்றப்பட்டால் அந்த கன்டென்ட் குறைந்து விடுமோ என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
அதே சமயம் அவர் தன் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும் தன் அம்மாவை பார்க்க வேண்டும் எனவும் கண்ணீர் விட்டு அழுதார். இந்த நிலையில் வனிதா கமலுக்கு எதிராக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்தது முதல் பல விமர்சனங்களை தெரிவித்து வரும் வனிதா தற்போது கமல்ஹாசன் முன்னுக்கு முரணாக நடந்து கொள்வதாகவும் அடுத்த சீசனிலும் இதேபோன்று அவர் நடந்து கொண்டால் தான் நிகழ்ச்சி குறித்து ரிவ்யூ கொடுக்க மாட்டேன் எனவும் வனிதா வீடியோ வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க