BIGG BOSS
என்ன double eviction-ஆ… இந்த இரண்டு போட்டியாளர் தான் வெளியேறுகிறார்களா…? குழப்பத்தில் பிக் பாஸ் வீடு…!
விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் பிக் பாஸ்ஸானது, கடந்த சீசன்களை விட தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் சீசன் 7 விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் இதில் விளையாடும் போட்டியாளர்கள் எவ்வாறு விளையாடினால் மக்களின் மனதை கவர்ந்து இறுதிவரை பயணிக்க முடியும் என்பதை தங்கள் மனதுக்குள் தெளிவுபடுத்திக் கொண்டு இதற்கு ஏற்றார் போல் யுக்தி அமைத்து விளையாடி வருகின்றனர். இதுவே போட்டியின் சிறப்பம்சமாக உள்ளது.
மேலும் இதனை விறுவிறுப்பாக்க போட்டி தொடங்கிய முதல் வாரத்திலேயே நாமினேஷன் ப்ராசஸ் தொடங்கப்பட்டு குறைவான வாக்குகளை பெற்ற அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டார் இவரை தொடர்ந்து பவா செல்லத்துரை தனது உடல்நிலையை காரணம் காட்டி போட்டியிலிருந்து தாமாகவே வெளியேறினார்.
இவர்களைத் தொடர்ந்து கடந்த வாரம் நடந்த நாமேஷன் பிராசஸில் strong ப்ளேயராக கருதப்பட்ட விஜய் வர்மா, யாரும் எதிர்பாராத வண்ணம் நிகழ்ச்சி பார்க்கும் ரசிகர்களை அதிர்ச்சி ஊட்டம் வண்ணமாக வெளியேறினார்.இந்நிலையில் இந்த வாரம் நாமினேஷன் பிராசஸில் அக்ஷயா, விக்ரம்,யுகேந்திரன், விஷ்ணு கூல் சுரேஷ், மாயா, ஜோவிக்கா, மணிசந்திரன், பிரதீப் என மொத்தம் 11 போட்டியாளர்கள் உள்ளனர்
இந்த நிலையில் 34.17 %சதவீத வாக்கு உடன் நாமினேஷன் பிராசஸில் பிரதீப் முதலிடத்தில் உள்ளார். இவரை அடுத்து ஸ்மால் பாஸ் வீட்டிலில் இருக்கும் நிக்சன் சிறப்பாக விளையாடி 12.64% சதவீத வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்திலுள்ளார். நிக்சனை அடுத்து நடன இயக்குனர் மணி 8.5 9% மூன்றாம் இடத்திலும், வனிதாவின் மகளான ஜோவிகா 7.97 %வாக்குகளை பெற்று நான்காம் இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களை பின்தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் கூல் சுரேஷ், விஷ்ணு,, மாயா,யுகேந்திரன் ஆகியோர் உள்ளனர். மேலும் குறைவான வாக்குகளை பெற்று டேஞ்சர் ஷோனில் வினுஷா, விக்ரம் மற்றும் அக்சயா உள்ளனர். இந்நிலையில் 5 வைல்ட் கார்டு என்ட்ரி இருக்கும் என்று கூறப்படும் நிலையில் இந்த வாரம் டபுள் eviction நடைபெற வாய்ப்புஉள்ளதாக அறியப்படுகிறது. இவ்வாறு இருக்கையில் டபுள் eviction நடைபெற்று அதில் யுகேந்திரன் மற்றும் வினுஷா வெளியே சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .