பிக் பாஸ் 7 வீட்டை விட்டு வெளியேறப்போகும் முதல் போட்டியாளர் இவரா…? இந்த ட்விஸ்ட்ட நாங்க எதிர்பாக்கலையே…! - cinefeeds
Connect with us

BIGG BOSS

பிக் பாஸ் 7 வீட்டை விட்டு வெளியேறப்போகும் முதல் போட்டியாளர் இவரா…? இந்த ட்விஸ்ட்ட நாங்க எதிர்பாக்கலையே…!

Published

on

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியானது 6 சீசன்களை கடந்து ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன்  7 வது சீசன் தொடங்கியது. இதில் விசித்ரா, விஷ்ணு, வினுஷா தேவி, சரவணன், பாவா செல்லதுரை, கூல் சுரேஷ், ஆயிஷா உதயகுமார், ஜோவிகா, ஐஷு, பிரதீப் ஆண்டனி, மாயா கிருஷ்ணன், ரவீனா, யுகேந்திரன், மணி சந்திரா, விஜய் வர்மா, அனன்யா, பூர்ணிமா ரவி, நிக்சன் என 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில் விஜய் வர்மா இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இந்த தடவை பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது ஆரம்பமாகி ஒரு சில நாட்களிலேயே சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. இந்நிலையில் நேற்று விசித்ரா அடிப்படை கல்வி எல்லோருக்கும் அவசியம் என கூற, அதற்கு ஜோவிகா ‘எல்லாருமே படிச்சிட்டு பெரிய ஆள் ஆகணும்றது இல்லை. நான் பேசிட்டு இருக்கேன் நீங்க நிறுத்துங்க’ என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் ‘படிப்பு என்கிற விஷயத்தால எல்லா பிள்ளைகளும் தப்பான வழியில் போறாங்க. அதை பற்றி பேச தான் நான் வந்தேன். நான் பேசிட்டு இருக்கேன் நீங்க நிப்பாட்டுங்க’ என விசித்ராவை ஆப் செய்தார். இப்படி நேற்று பிக் பாஸ் வீடு கலவரமாய் காணப்பட்டது.

Advertisement

[irp]

இந்த சூழலில் இந்த வார நாமினேஷனில் பவா செல்லதுரை, அனன்யா, பிரதீப் ஆண்டனி, யுகேந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் இருக்கின்றனர். இதில் யார் வெளியே போகப்போகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. அதன்படி பவா செல்லதுரை, விசித்திரா, யுகேந்திரன் ஆகிய மூன்று பேரில் யாராவது ஒரு ஆள் முதலில் வெளியே செல்லலாம் என முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது முதலில் வீட்டை விட்டு வெளியேறுபவர் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அனன்யா ராவ்தான் இந்த வாரத்தில் வீட்டை விட்டு வெளியேறப்போகிறார் என்று கூறப்படுகிறது. அவர் இதுவரை குறைந்த வாக்குகளே பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. பொறுத்திருந்து பாப்போம் யார் வெளியேற்றப்படுவார் என்பதை.

Advertisement

[irp]

Advertisement
Continue Reading
Advertisement