BIGG BOSS
டைட்டில் வென்ற அர்ச்சனா.. நடுரோட்டில் விஷ்ணு செய்த காரியம்… சொன்னதை செஞ்சிட்டாரே…!!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்தது. அந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா, ரவீனா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா, ஜோவிகா, அக்ஷயா உதயகுமார், மணிச்சந்திரா, விசித்ரா உள்ளிட்டோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். பிக் பாஸ் சீசன் 7 ஆரம்பத்தில் இருந்தே விறுவிறுப்பாக நடந்தது.
தொடக்கத்திலேயே போட்டியாளர்கள் மத்தியில் சண்டை, கலவரம், சர்ச்சைகள் தொடங்கியது. பிறகு வேல்டு கார்டு போட்டியாளராக அர்ச்சனா, தினேஷ் உள்ளிட்டோர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர். இந்நிலையில் பல போராட்டங்களுக்கு பிறகு பிக் பாஸ் சீசன் 7 டைட்டிலை அர்ச்சனா வென்றார். டைட்டில் வென்ற அச்சனாவுக்கு 50 லட்சம் ரூபாய் பணம், 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாட், ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது.
பிக் பாஸ் வரலாற்றில் வைல்டு கார்டு போட்டியாளராக என்ட்ரி கொடுத்து டைட்டிலை வென்ற பெருமை அர்ச்சனாவே சேரும். இந்நிலையில் டாப் 5 போட்டியாளர்களில் ஒருவரான விஷ்ணு பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது தினேஷ், அர்ச்சனா, மணி இவர்கள் மூவரில் யார் வெற்றி பெற்றாலும் 10000 வாலா பட்டாசு வெடிப்பேன் என கூறியுள்ளார்.
இந்நிலையில் அர்ச்சனா டைட்டிலை வென்றதால் நடுத்தெருவில் விஷ்ணு பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளார். அது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் விஷ்ணு சொன்னதை செஞ்சுட்டாரே என பாராட்டி வருகின்றனர்.