LATEST NEWS
“அப்பான்னா எமோஷனல் ஆகிடுவேன்..” மேடையில் தேம்பி, தேம்பி அழுத கேப்டன் மகன்.. வைரலாகும் வீடியோ..!!
பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவால் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். பெரும் மக்கள் கூட்டம் முன்னிலையில் அரசு மரியாதையுடன் கேப்டனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் கேப்டன் விஜயகாந்த் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற கேப்டன் விஜயகாந்த் நினைவேந்தல் கூட்டத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், நாசர், விஷால், ஜெயம் ரவி, கார்த்தி, பார்த்திபன் உள்ளிட்டார் கலந்து கொண்டனர். அவர்கள் விஜயகாந்த் குறித்து பேசி புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதனையடுத்து பிரேமலதா காணொளி வாயிலாக பேசி நடிகர் சங்க கட்டடத்தை விரைவில் கட்டி முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து மேடையில் பேசிய விஜய பிரபாகரன் தொடக்கத்தில் பேச முடியாமல் தனது அப்பாவை நினைத்து ஏங்கி அழுதார். அவர் பேசியதாவது, அப்பான்னா நான் எமோஷனல் ஆகிடுவேன். யாரும் என்ன தப்பா நினைச்சுக்காதீங்க. கேப்டன் இல்லன்னு நினைக்காதீங்க.
அப்பா மக்களுக்காக தான் எங்களை விட்டு சென்றுள்ளார். கேப்டனின் இறுதி சடங்கில் கலந்து கொள்ளாத யார் மீதும் எங்களுக்கு வருத்தம் இல்லை. அவர்கள் சூழ்நிலைகளை நாங்கள் புரிந்து கொள்கிறோம். நன்றி என பேசியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அவருக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.