BIGG BOSS
பிக் பாஸ் வீட்டில் பெண்களுக்கு இப்படி ஒரு நிலையா…? வெளிப்பட்ட உண்மை முகங்கள்…! வெளியான பரபரப்பு ப்ரோமோ…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியானது 6 சீசன்களை கடந்து ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் 7 வது சீசன் தொடங்கியது. இதில் விசித்ரா, விஷ்ணு, வினுஷா தேவி, சரவணன், பாவா செல்லதுரை, கூல் சுரேஷ், ஆயிஷா உதயகுமார், ஜோவிகா, ஐஷு, பிரதீப் ஆண்டனி, மாயா கிருஷ்ணன், ரவீனா, யுகேந்திரன், மணி சந்திரா, விஜய் வர்மா, அனன்யா, பூர்ணிமா ரவி, நிக்சன் என 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில் விஜய் வர்மா இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். விஜய் வர்மாவை குறைவாக கவர்ந்த ஐஷு, நிக்சன், பாவா செல்லதுரை, அனன்யா, விணுஷா, ரவீனா ஆகிய 6 பேரும் இரண்டாவது பாதை வழியாக small boss வீட்டிற்கு அனுப்பட்டுள்ளனர். இந்த வார எவிக்ஷனுக்கு சில போட்டியாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த தடவை பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது ஆரம்பமாகி ஒரு சில நாட்களிலேயே சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது.
அந்தவகையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோவில் முதல் ஷாப்பிங் ரீபிளேசிங் டாஸ்க் “வெயிட் பார்ட்டி’ என்ற பெயரில் இடம்பெறுகின்றது. மேலும் இந்த டாஸ்க்கில் தோற்று விட்டால் மேக்அப் பொருட்கள் அனைத்தும் உங்களிடமிருந்து பறிமுதல் செய்யப்படும் எனவும் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது 2வது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் குறித்த டாஸ்க்கில் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் தோற்றுவிடுகிறார்கள். இதனால் மேக்கப் பொருட்கள் அனைத்தும் பறிக்கப்படுவதோடு, மேக்கப் இல்லாமல் ஒருநாள் இருக்க வேண்டுமென்ற நிபந்தனையும் விதிக்கப்படுகிறது.
அத்தோடு பெண்கள் அனைவரும் தங்களுடைய மேக்கப்பை நீக்கிக் கொண்டு இருக்கிறார்கள். அந்தசமயத்தில் பிரதீப் ஆண்டனி மணி சந்திராவிடம் ஏதோ குறை கூறிக் கொண்டிருக்கிறார். மறுபுறம் பூர்ணிமா ரவி “இந்த டாஸ்க்கில் தோற்பது நல்லது தான். ஏனென்றால் பெண்கள் தங்கள் மேக்கப்பை துறப்பீர்கள். உங்களுடைய அப்பாவியான முகம் வெளிப்படும். அது எனக்கு வாய்ப்பாக அமையும்” என பிரதீப் சொன்னதாக கூறுகின்றார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ…