BIGG BOSS
எலிமினேஷன் கார்டில் ஜோவிகாவின் பெயர்… ஆனால் யாருமே எதிர்பார்க்காத டுவிஸ்ட் வைத்த பிக்பாஸ்… குழம்பும் ரசிகர்கள்..!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிலையில் 18 பேர் வீட்டுக்குள் நுழைய அடுத்ததாக வைல்டு கார்டு என்றி மூலமாக 5 பேர் வீட்டுக்குள் சென்றனர். இவர்களில் இதுவரை பவா செல்லதுரை, அனன்யா ராவ், விஜய் வர்மா, வினுஷா, யுகேந்திரன், அன்ன பாரதி, கானா பாலா, ஐசு மற்றும் ஆர் ஜே ப்ராவோ உள்ளிட்டோர் வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டன. அதேசமயம் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். ஏற்கனவே வெளியே போனவர்கள் உள்ளே வந்ததும் போட்டியும் சுவாரசியமாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
இந்த வாரம் நாமினேஷனில் சரவணன் விக்ரம், விசித்ரா, பூர்ணிமா, தினேஷ், அர்ச்சனா, கூல் சுரேஷ், மணி, ஜோவிகா ஆகியோர் சிக்கி இருந்த நிலையில் சரவண விக்ரம் இந்த வாரம் எலிமினேட் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் ட்விஸ்ட் வைத்த பிக் பாஸ் ஜோவிகாவை எலிமினேட் செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். ஆனால் அதிலும் ஒரு டெஸ்ட் வைத்துள்ளார். அதாவது ஜோவிகா எலிமினேட் ஆனாலும் அவரை நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றாமல் சீக்ரெட் ரூமில் அவரை தக்க வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நேற்றே அவர் எலிமினேட் ஆனாலும் அவர் வீட்டுக்கு வரவில்லை என்ற தகவல் நேற்றைய பிக் பாஸ் ரிவ்யூ ஷோவில் மனிதா உலரிவிட்டார். இதன் மூலமாக வனிதாவின் மகள் சீக்ரெட் ரூமில் உள்ளது உறுதியாகிவிட்டது. ஆனால் இவருக்கு முன்னதாக சீக்ரெட் ரூமில் இதற்கு முந்தைய சீசனில் மூன்று போட்டியாளர்கள் இருந்துள்ளனர். அதாவது முதல் சீசனில் சுஜா வருணி, இரண்டாவது சீசனில் வைஷ்ணவி, மூன்றாவது சீசனில் சேரன் ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் சீக்ரெட் ரூமில் தக்க வைக்கப்பட்டனர். ஆனால் கடந்த மூன்று சீசன்களாக சீக்ரெட் ரூமில் யாரும் தைக்க வைக்கப்படாத நிலையில் தற்போது நடைபெறும் ஏழாவது சீசனில் ஜோவிகாவை தக்க வைத்து பிக் பாஸ் தன்னுடைய ஆட்டத்தை தொடங்கியுள்ளார்.