BIGG BOSS
வெளியே வந்தவுடன் அம்மாவுடன் லைவ்… பிரதீப் ஆண்டனி கூறிய கருத்துக்கு பதிலடி கொடுத்த ஜோவிகா…!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது ஏழாவது சீசன் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் விசித்ரா, சரவணன் விக்ரம், தினேஷ், பூர்ணிமா, அர்ச்சனா, கூல் சுரேஷ், மணி, ஜோவிகா ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் இருந்தனர்.
இந்த வாரம் சரவணன் விக்ரம் எலிமினேட் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் பிக் பாஸ் ஜோவிகாவை எலிமினேட் செய்து அதிர்ச்சி கொடுத்தார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவதற்கு முன்பு யாரிடமும் சண்டை இல்லாமல் நல்ல நட்புடன் வெளியேறுவது எனக்கு மகிழ்ச்சி என ஜோவிகா கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு முக்கிய போட்டியாளரான பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். இதற்கு சோசியல் மீடியாவில் பல்வேறு தரப்பினரும் கண்டனத்தை பதிவு செய்தனர். இணையத்தில் பிரதீப்புக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜோவிகாவின் அம்மா நடிகை வனிதா தன்னை யாரோ பலமாக அடித்ததாகவும் அவர் ரெட் கார்டு கொடுக்கிறீர்களா? என கேட்டதாகவும் அவர் பிரதீப்பின் ஆதரவாளராகத்தான் இருக்க வேண்டும் எனக் கூறி புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார். அதனைப் பார்த்த பிரதீப் நான் யாருக்கும் எதிராக எதுவும் செய்ய மாட்டேன். உங்களுக்காக நான் வருந்துகிறேன்.
ஓய்வு எடுங்கள். ஜோதிகா அவராகவே வெற்றி பெறுவார். நீங்கள் எதுவும் உதவி செய்ய வேண்டாம் என ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் எலிமினேஷனுக்கு பிறகு தனது தாயுடன் லைவில் வந்த ஜோவிகா பிக் பாஸ் விட்டு வெளியேறியதில் எனக்கு மகிழ்ச்சி தான். நான் நல்ல மனநிலையில் இருக்கிறேன். வெளியே வந்ததும் எனது அம்மாவிற்கு முகத்தில் அடிபட்டதை பார்த்து வருந்தினேன்.
எங்க அம்மா எனக்கு ஆதரவாக தான் செயல்படுகிறார் என கூறினார்கள். அம்மா எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை. அவர் நியாயத்தை மட்டும் தான் பேசினார். எது சரியோ அதை மட்டும் தான் செய்தார். என்னை பல நேரங்களில் கண்டித்துள்ளார் என பிரதீப் கூறியதற்கு பதில் அளிக்கும் விதமாக ஜோவிகா பேசியுள்ளார்.