வந்த உடனே வில்லங்கம்.. போட்டியாளர்களுக்குள் கொளுத்தி போட்ட ஜோவிகா.. வைரலாகும் புரோமோ..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

வந்த உடனே வில்லங்கம்.. போட்டியாளர்களுக்குள் கொளுத்தி போட்ட ஜோவிகா.. வைரலாகும் புரோமோ..!!

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடைசியாக டைட்டிலை வெல்லப்போவது யார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். வழக்கமாக பிக் பாஸ் வீட்டின் இறுதி வாரத்தில் எலிமினேட் ஆன போட்டியாளர்கள் ஒவ்வொருவராக பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வார்கள்.

#image_title

இந்த சீசனின் ஒவ்வொரு நாளும் மூன்று போட்டியாளர்கள் வீதம் பிக் பாஸ் வீட்டில் அனுப்பப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் வினுஷா, அனன்யா ராவ், அக்ஷயா ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற நிலையில் நேற்று சரவணா விக்ரம், கூல் சுரேஷ், ஆர் ஜே பிராவோ ஆகியோர் என்ட்ரி கொடுத்தனர்.

#image_title

இன்று முதல் ஆளாக ஜோவிகா பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று போட்டியாளர்களிடையே சண்டையை மூட்டி விடும் விதமாக பேசியுள்ளார். இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. அவர் தினேஷிடம் பேசும் போது நீங்கள் தனியாக விளையாடுவது போல் தெரியவில்லை. நீங்கள் மூன்று பேரும் ஒரு குரூப் போலவே தெரிகிறது. தினேஷ் பற்றி தனியாக பேசும்படி எதுவும் நடக்கவில்லை என கூறுகிறார்.

#image_title

பின்னர் மாயாவிடம் சென்று உங்கள் மேல் ஒரு கோபம் இருக்கிறது. அர்ச்சனா எங்க எல்லாரையும் என்னென்ன பேசுனாங்க. இப்போ நீங்க அவங்க கூடவே கட்டி புரண்டுகிட்டு இருக்கீங்க. சத்தியமா சொல்றேன் இந்த சீசன்ல நீங்க இல்லனா இந்த சீசன் வேஸ்ட் என கூறியுள்ளார். இது அர்ச்சனா மற்றும் மாயா இடையே சண்டையை மூட்டி விடும் விதமாக உள்ளது. அந்த புரோமோவை பார்த்த ரசிகர்கள் ஜோவிகா பேசுவது வனிதா ஓட ட்ரெயினிங்கா இருக்கும் என விமர்சனம் செய்து வருகின்றனர். இதோ அந்த புரோமோ..

Advertisement