BIGG BOSS
அப்படிப்போடு…! பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் மாஸ் ஹீரோயின்…? யாரும் எதிர்பாராத டிவிஸ்ட்…!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இதற்கு ரசிகர்கள் பட்டாலும் ஏராளம். இந்த நிகழ்ச்சி தமிழில் இதுவரை ஏழு சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. கடந்த சீசன்களை இதுவரையில் நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார் . இந்த நிலையில் திடீரென்று கமல்ஹாசன் நிறைய படங்களில் கமிட்டாக இருப்பதால் ஷோவில் இருந்து திடீரென்று விலகி உள்ளதாக நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டார் .
இந்த செய்தியை பார்த்து ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இந்த நிலையில் கமலஹாசனுக்கு பதிலாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகி வருகிறது. தற்போது பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிய தொகுப்பாளராக நடிகை நயன்தாராவோடு பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த செய்தி வெறும் வதந்திதானா? அல்லது அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வருவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.