BIGG BOSS
ஆரம்பிச்சுட்டாங்கடா…! பிக் பாஸ் வீட்டில் மணியிடம் அந்த மாதிரி நடந்து கொண்ட ரவீனா…! வைரலாகும் வீடியோ…!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியானது 6 சீசன்களை கடந்து ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் 7 வது சீசன் தொடங்கியது. இதில் விசித்ரா, விஷ்ணு, வினுஷா தேவி, சரவணன், பாவா செல்லதுரை, கூல் சுரேஷ், ஆயிஷா உதயகுமார், ஜோவிகா, ஐஷு, பிரதீப் ஆண்டனி, மாயா கிருஷ்ணன், ரவீனா, யுகேந்திரன், மணி சந்திரா, விஜய் வர்மா, அனன்யா, பூர்ணிமா ரவி, நிக்சன் என 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
இதில் விஜய் வர்மா இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். விஜய் வர்மாவை குறைவாக கவர்ந்த ஐஷு, நிக்சன், பாவா செல்லதுரை, அனன்யா, விணுஷா, ரவீனா ஆகிய 6 பேரும் இரண்டாவது பாதை வழியாக மற்றொரு வீட்டிற்கு சென்றனர். இந்த ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்களே பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு சமைத்து கொடுக்க வேண்டும். வீட்டு பாத்ரூம்களை கழுக வேண்டும் என பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நாமினேஷனும் முடிந்தது. தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து ரவீனா மற்றும் மணி நடந்துகொண்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிகம் வலம் வருகிறது. அதில் ரவீனா, மணியின் கையை கடிக்கிறார். அதைப்பார்த்த ரசிகர்கள் பொது நிகழ்ச்சியில் இப்படியா நடந்து கொள்வது? என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ….
#*? #RaveenaDaha #Mani#BiggBossTamil7 pic.twitter.com/Kedjm3ArHq
— BBTamilVideos (@BBTamilVideos) October 3, 2023