பொங்கல் முன்பணம் ரூ.10,000: டாஸ்மாக் ஊழியர்களுக்குத் தமிழக அரசு ஜாக்பாட் அறிவிப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பொங்கல் முன்பணம் ரூ.10,000: டாஸ்மாக் ஊழியர்களுக்குத் தமிழக அரசு ஜாக்பாட் அறிவிப்பு..!!

Published

on

டாஸ்மாக் ஊழியர்களுக்குப் பொங்கல் மற்றும் தீபாவளி ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு, பண்டிகை முன்பணமாக ரூ.10,000 வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஊழியர்களுக்கு மருத்துவச் செலவுகளுக்கான நிதியுதவியும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாதம் 2 மணி நேரப் பர்மிஷன், வார விடுமுறை மற்றும் தற்செயல் விடுப்பு (CL) ஆகிய சலுகைகளும் உண்டு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பண்டிகை முன்பணம், விடுப்பு மற்றும் மருத்துவ உதவிகளைப் பெற விரும்பும் ஊழியர்கள், ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அந்தச் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in