ட்ரிபிள் டமாக்கா..! பொங்கலுக்குக் காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்… முதல் பொங்கலிலேயே அதிரடி காட்டப்போகும் விஜய்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ட்ரிபிள் டமாக்கா..! பொங்கலுக்குக் காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்… முதல் பொங்கலிலேயே அதிரடி காட்டப்போகும் விஜய்..!!

Published

on

2021-ல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் ₹1,000 ரொக்கத்தை பொங்கல் பரிசாக வழங்கிய நிலையில், 2025-ல் ரொக்கப்பரிசு வழங்காமல் தவிர்த்து, பின்னர் 2026-ல் ட்ரிபிள் தமாக்காவாக ₹3,000-ஐ வாரி வழங்கியது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் தற்போது ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தவெக அரசு இதே பாணியைப் பின்பற்றி சில ஆண்டுகள் கழித்து ரொக்கப்பரிசை வழங்குமா அல்லது ஆட்சிக்கு வந்த முதல் பொங்கலுக்கே ரொக்கப்பரிசை வழங்கி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்களா என்ற பலத்த எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

மக்களின் இந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தவெக அரசு தற்போது வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தீபாவளி பரிசுத் தொகுப்பை மக்களுக்கு வழங்குவதற்கான ஆயத்தப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தீபாவளி பரிசுத் தொகுப்பு குறித்த அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில், அதைத் தொடர்ந்து வரும் பொங்கல் பண்டிகைக்கான தவெக அரசின் ரொக்கப்பரிசு அறிவிப்பு எவ்வாறு இருக்கும் என்பதை அறிய ஒட்டுமொத்த தமிழக அரசியல் அரங்கும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in