CRIME
“அய்யோ கொடுமையே.. திடீரென சரிந்து விழுந்த சிலுவை..” பக்தர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பாதிரியாருக்கு நேர்ந்த சோகம்.. இணையத்தை உலுக்கும் மரண காட்சி..!!
ஈக்வடாரில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட திருப்பலியின் போது, சிலுவை விழுந்து கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவம் அக்டோபர் 17 சனிக்கிழமையன்று நடந்துள்ளது. குவாயாகில் பகுதியில் அமைந்துள்ள ‘நியூஸ்ட்ரா செனோரா டெல் பெர்பெடுவோ சோகோரோ’ தேவாலயத்தில் பாதிரியார் பேட்ரிக் அல்பிரெடோ சான்செஸ் மொலினாரி தனது வழிபாட்டு குழுவினரிடம் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த பெரிய சிலுவை திடீரென அவர் மீது சரிந்து விழுந்தது. அது அவரது தலையில் பலமாகத் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த முழு சம்பவமும் இணையதள நேரலையில் பதிவாகி, அதைப் பார்த்துக் கொண்டிருந்த பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் நெஞ்சை உலுக்கும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
