TRENDING
முதல் திருமணநாளை grand-ஆ…. கொண்டாடிய பிக் பாஸ் பிரபலம்… வாழ்த்து மழை பொழிந்த ரசிகர்கள் …!

தமிழில் சிந்து சமவெளி என்ற படத்தில் கதாநாயனாக அறிமுகமானர் ஹரிஷ் கல்யாண். இதன்பின் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவருக்கு சரிவர பட வாய்ப்புகள் அமையாமல் இருந்தது. பின்னர் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 1ல் இவர் வைல்ட் கார்டு என்ட்ரி போட்டியாளராக பங்கேற்றார்.பிக் பாஸ் வீட்டில் 98 நாட்கள் தங்கி இருந்த இவர் செகண்ட் ரன்னர்அப் பட்டத்தை வென்றார்.
இதன் பின் பிக் பாஸ் புன் புகழை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஹரிஷ் கல்யாண் காதல் அடிப்படையாகக் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்தார். அந்த வகையில் பியார் பிரேமா காதல், ஓ மண பெண்ணே, தாராளபிரபு மற்றும் LGM போன்ற படங்களில் நடித்து பெண் ரசிகர்கள் மனதில் பெருமிடத்தை பெற்றுள்ளார். காதல் படங்களில் மாஸ் காட்டும் இவரின் முதல் காதல் தோல்வி அடைந்தது. அதனால் ஹரிஷ் பெற்றோர் பார்த்த பெண்ணான நர்மதாவை காதலித்து கடந்த ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி மிகவும் க்ராண்டாக திருமணம் செய்து கொண்டார்.
View this post on Instagram
இந்நிலையில் நேற்று இவர்களின் முதலாம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதில் கடந்த ஓராண்டு காலத்தில் இவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த அழகிய நிகழ்வுகளை ஒரு வீடியோ பதிவாக எடிட் செய்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கும் அவர் வெளியிட்டுள்ள போட்டோஸ்களுக்கும் ரசிகர்கள் தங்களது பெரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.