அடடே இவர் ஊர்வசியின் மகளா… அழகில் அம்மாவேயெ மிஞ்சிடாரு… - cinefeeds
Connect with us

LATEST NEWS

அடடே இவர் ஊர்வசியின் மகளா… அழகில் அம்மாவேயெ மிஞ்சிடாரு…

Published

on

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ஊர்வசி. இவரின் உண்மையான பெயர் கவிதா இரஞ்சனி. இவர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவருக்கு கலாரஞ்சினி மற்றும் கல்பனா என இரண்டு மூத்த சகோதரிகள் உள்ளனர். இவர்கள் சில மலையாளத் திரைப்படங்களிலும் நடித்துள்ளனர்.   குடும்பம் சென்னைக்கு மாறியதால், கோடம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரையிலும் படித்தார்.

#image_title

அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகள் அதிகமாக வந்ததால் படிப்பைத் தொடர முடியவில்லை.இவர் 1979 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான’ கதிர்மண்டபம்’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார்.அதைத் தொடர்ந் பல படங்களில் குழந்தை நாசத்திரமாக நடித்தார் .

#image_title

1983 ஆம் ஆண்டு வெளியான கே பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான ‘முந்தானை முடிச்சு’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.அதைத் தொடர்ந்து 1986இல் வெளியான ‘தொடரும் உறவு’ படத்தில் கார்த்திக்கு கதாநாயகியாக நடத்தியிருந்தார். அப்போது அவருக்கு வயது 13.

#image_title

இவர் பல மேடை நிகழ்ச்சிகளிலும் , ஒரு சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.  இவர் தமிழ் ,மலையாளம் ,தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிப்படங்களில் சுமார் 702 படங்களில்  நடித்துள்ளார்.நடிகை ஊர்வசி மலையாள நடிகரான மனோஜ் கே ஜெயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

#image_title

அதன் பிறகு இருவரின் மன கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து பெற்றனர்.இந்த தம்பதிகளுக்கு குஞ்சட்டா என்ற மகள் இருந்த நிலையில், மகளை மனோஜ் அழைத்துச் சென்றுவிட்டார்.அதன் பிறகு தொழிலதிபரான சிவபிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

#image_title

இத்தனை நாள் தந்தையின் கண்காணிப்பில் இருந்து வந்த குஞ்சட்டா தற்போது வளர்ந்துவிட்டதால், ஊர்வசியை அவ்வப்போது சந்தித்து வருகிறார். அந்த வகையில் நடிகை ஊர்வசி, மகள் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

#image_title

Copyright © 2023 www.cinefeeds.in