TRENDING
ரி-என்ட்ரி கொடுத்த ஆதிகுணசேகரன்… வந்ததும் மோதிக்கொள்ளும் அப்பா,மகன்… விறுவிறுப்பில் எதிர்நீச்சல்…!

சன்டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்று எதிர் நீச்சல். பெண்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிகர் மாரிமுத்து நடித்துள்ளார். சில வாரங்களுக்கு முன்பு அவர் காலமானதால், அவருக்கு பதிலாக குணசேகரன் கேரக்டரில் வேல ராமமூர்த்தி களமிறங்கியுள்ளார்.
பல படங்களில் நடித்து வரும் எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி தான் குணசேகரன் கதாபாத்திரத்துக்கு ஒப்பந்தமானார். பின் பிஸியாக இருப்பதால் கால்ஷீட் பிரச்சனையின் காரணமாக அறிமுக எபிசோடில் போலீசாரை அடிப்பதும், அடுத்த எபிசோடில் சிறை செல்லும் காட்சியும் படமாக்கப்பட்டது. ஆதி குணசேகரன் சிறைக்கு சென்றுள்ளதால், அவரது கதாபாத்திரம் இல்லாமல் சீரியல் வித்தியாசமான கோணத்தில் பயணிக்கும் என தகவல் வெளியானது.
ஆனால் தற்போது இந்த தகவலை பொய்யாக்கும் வகையில் வேல ராமமூர்த்தி ஆதி குணசேகரனாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் முழு குடும்பமும் காரில் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதில் ஜான்சி ராணியும் இவர்களுக்கு துணையாக செல்வது போல் காட்சிவருகிறது. அடுத்து கதிர் யாருடனோ சிரித்து பேசிக்கொண்டு இருக்க, கரிகாலன் மாமா லேட்டானால் பிளான் டைவர்ட் ஆகிவிடும் என்கிறார்.
ஆதி குணசேகரன் சிறையில் இருந்து வீட்டிற்கு வருகிறார். அடுத்ததாக, தர்ஷனிடம், உன் ஆத்தாவின் பேச்சை என்னிக்கு கேட்கத் தொடங்கினியோ அன்னைக்கே உன் புத்தி மரத்துவிட்து என்று கூறுகிறார். இதற்கு எதுவும் பேசாத தர்ஷனை, “என்ன இவன் இப்படி முழிக்கிறான் ?” என்று முறைத்து கேட்கிறார். இதனை தொடர்ந்து ஞானம்,’ அண்ணே அவன் முழிக்கல முறைக்குறான் என்று சொல்கிறார். முறைப்பான் முறைப்பான் வளர்ப்பு அப்படி என்று கூற, இதற்கு பதில் சொல்ல இயலாமல் விசாலாட்சி விழித்துக் கொண்டிருக்கிறார்.இத்துடன் இந்த ப்ரோமோ முடிகிறது.
இப்படிப்பட்ட சூழலில் ஜீவானந்தம் மற்றும் அப்பத்தா இருவரின் கதையை முடிக்க கோவிலில் கதிர் கும்பல் தயாராக உள்ளது, இதைபோல் கதிரையும் குணசேகரனையும் போட்டுத்தள்ள அதே திட்டத்துடன் ஜீவானந்தம் வருகிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.