LATEST NEWS
படையப்பா படத்துல நடிச்ச குழந்தை நட்சத்திரம் … இந்த சீரியல் ஹீரோயின் -ஆ … வேகமாக பரவும் புகைப்படங்கள்…!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் ரஜினிகாந்த். இவர் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று பட்டத்தை பெற்று சிறந்து விளங்குகிறார். இவருடன் நடித்த பல குழந்தை நட்சத்திரங்கள் தற்பொழுது ஹீரோயின்களாக நடித்து வருகின்றனர். இந்நிலையில் இவருடன் நடித்த குழந்தை நட்சத்திரமாக நடித்த ஒருவர் தற்பொழுது சீரியலில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
தமிழில் கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் படையப்பா. இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் சிவாஜி கணேசன், லட்சுமி, சௌந்தர்யா ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்திருந்தனர். இதில் எதிர்மறையான கதாபாத்தில் நேர்த்தியாக நடித்திருந்த ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்டது.
இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தான் கே. எஸ். ரவிக்குமார் மற்றும் ரஜினிகாந்த் மிகவும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்த நட்பின் காரணமாக கே.எஸ்.ரவிக்குமார் , ரஜினியை வைத்து லிங்கா என்ற படத்தை இயக்கினார். ஆனால் இப்படமானது எதிர்பார்த்த அளவுக்கு சரிவர ஓடவில்லை. ரஜினிகாந்த் நடித்த படையப்பா படத்தின் அறிமுக பாடலான, ‘என் பேரு படையப்பா’ என்ற பாடலில் நடுவே வரும் ‘நான் மீசை குழந்தை அப்பா’ என்ற வரி வரும் பொழுது வருகின்ற குழந்தை தான் தற்பொழுது சீரியலில் ஹீரோயினாக கலக்கிக் கொண்டிருக்கும் ஹேமா பிந்து ஆகும்.
இந்த படத்தில் நடித்துள்ள ஹேமா பிந்து, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘இதயத்தை திருடாதே’ என்ற சீரியல் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பின்பு பல சீரியல்களில் நடித்துள்ள ஹேமா பிந்து தற்பொழுது சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘இலக்கியா’ சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் இவர் குழந்தை நட்சத்திரமாக இருந்த பொழுது விஜயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் தற்பொழுது இன்ஸ்ட்ரக்ராமில் ட்ரெண்டாகி வருகிறது.