LATEST NEWS
பாண்டியன் ஸ்டோர்ஸ் பார்ட் 1-யை …. தொடர்ந்து பார்ட் 2-வில் நடிக்கும் …நடிகர் -நடிகைகளின் பெயர் மற்றும் கதாபாத்திரத்தின் பட்டியல்…!

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலானது 1 அக்டோபர் 2018 அன்று தொடங்கியது. ‘இது சகோதரர்களின் கதை’ என்ற டேக் லைனுடன் ஒளிபரப்பான இந்த சீரியலில் ஸ்டாலின் முத்து, சுஜிதா தனுஷ், குமரன், வெங்கட், ஹேமா ராஜ்குமார், சரவண விக்ரம் மற்றும் பலர் நடித்திருந்தனர். மேலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.
கடந்த 5 ஆண்டுகளாக ஒளிபரப்பப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த அக்டோபர் 28ம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால் இதற்கு சில வாரங்களுக்கு முன் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் 2ம் பாகத்தின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 இல் ,முதல் சீசனில் மூர்த்தி கேரக்டரில் நடித்த நடிகர் ஸ்டாலின் முத்துவை தவிர்த்து வேறு யாரும் இல்லை.
மேலும் முதல் சீசன் சகோதரர்களின் கதையாக ஒளிபரப்பான வகையில் , இரண்டாவது சீசன் “தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை ” என்ற டேக் லைனுடன் ஒளிபரப்பாகிகொண்டிருக்கிறது. முதல் சீசன் மூலம் சகோதரர்களின் பாசத்தைப் பற்றி கூறிய நிலையில் , தற்போது 2வது சீசன் தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான பாசத்தை கூறும் கதையாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் முதல் சீசனில் மூர்த்தியாக நடித்த ஸ்டாலின் முத்து, இரண்டாவது சீசனில் பாண்டியன் கேரக்டரில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் முதல் சீசனில் தனம் கேரக்டரில் சுஜிதா தனுஷ் நடித்திருந்தார் . தற்போது தனம் கேரக்டரில் நடிகை நிரோஷா நடிக்கிறார். முதல் சீசனில் மூர்த்திக்கு 3 இளைய உடன்பிறப்புகள் இருந்தனர். தற்போது 2வது சீசனில் பாண்டியனின் கேரக்டருக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்த கதாபாத்திரங்களில் வி. ஜே. தங்கவேல் கந்தசாமி, வசந்த் வாசி, ஆகாஷ் பிரேம்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதையடுத்து இசையமைப்பாளர் இளையராஜாவின் மருமகள் விலாசினி, ஷாலினி, ரிஹானா ஆகியோர் முக்கிய பெண் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் பிரபல வில்லன் நடிகர் அஜய் ரத்னம், காயத்ரி பிரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் வடிவு கேரக்டரில் காயத்ரி ப்ரியா நடிக்கிறார் என தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் சீசன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாவது சீசனும் அதே வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸின் முதல் சீசன் அக்டோபர் 28 ஆம் தேதி முடிவடைந்ததை அடுத்து, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடர் திங்கள்கிழமை (அக் 30) முதல் ஒளிபரப்பாகத் தொடங்கியது.