பிரபல இசையமைப்பாளரின் வாழ்க்கை வரலாறு… கதையில் நடிக்கும் தனுஷ்… யார் அந்த இசை அமைப்பாளருனு தெரியுமா …? - cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல இசையமைப்பாளரின் வாழ்க்கை வரலாறு… கதையில் நடிக்கும் தனுஷ்… யார் அந்த இசை அமைப்பாளருனு தெரியுமா …?

Published

on

இந்திய சினிமாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா. இவருக்கு இசைஞானி என்று பட்டம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு விதமான இசையால் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் இவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளதாகவும், அதில் இளையராஜா கேரக்டரில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், இப்படத்தினை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த செய்தியை மூத்த பத்திரிக்கையாளரான லதா சீனிவாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பிரத்யேக செய்தி: இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதை தனுஷ் உறுதிப்படுத்தியுள்ளார். இசைஞானி இளையராஜாவாக தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. படம் 2024 இல் தொடங்கி 2025 இல் திரைக்கு வரும்.

Advertisement

 

இந்தியாவின் இசை ஜாம்பவான்களில் ஒருவராக தனுஷ் நடிப்பதால் இப்படம் மிகவும் சிரத்தையுடன் உருவாகவுள்ளது. இப்படத்தை கனெக்ட் மீடியா நிறுவனம் தயாரிக்கும் என கூறப்படுகிறது.  மேலும் இளையராஜாவின் மகனான யுவன்சங்கர் ராஜா, தனுஷ் தனது தந்தை இளையராஜாவாக  ஆசை படுவதாகவும், பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறினார். இதுவே தனுஷின் நடிப்பில் வரும் முதல் வாழ்க்கை வரலாறு படமாகும்.

Advertisement

மேலும் இதில் நடிப்பதால் கண்டிப்பாக தனுஷிற்கு விருதுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.  இசைஞானி இளையராஜா 1000க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கும் 7000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார் என்பது நாம் அனைவரும் அறிவோம். இதைபோல்  50 ஆண்டுகளுக்கும் மேல் திரை வாழ்வில் இருக்கும் இவர் 20000ம் மேலான கச்சேரிகளை நடத்தி உள்ளார். இதனை அடுத்து  பத்ம பூஷன், பத்ம விபூஷன், சங்கீத நாடக அகாடமி விருது உள்ளிட்ட பல விருதுகள் வங்கியுள்ளார்.  இதைபோல் ஐந்து தேசிய விருதுகளும் பெற்றுள்ளார்.

இசைஞானி இளையராஜாவிற்கு லண்டனில் உள்ள ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழு அவருக்கு ‘மேஸ்ட்ரோ’ என்ற பட்டத்தை வழங்கியுள்ளது. மேலும் அவர், மோகன்லாலின் பான்-இந்தியப் படமான வருஷபாவை connekkt  மீடியா தயாரித்துள்ளது. நான் connekkt மீடியாவைத் தொடர்பு கொள்ள முயன்றேன் . ஆனால் அவர்களை தொடர்பு கொள்ள இயலவில்லை…” என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும் இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தயாரிப்பாளர் தரப்பிலிருந்து விரைவில் வெளியாகும்.

Advertisement

 

 

Advertisement

Advertisement