LATEST NEWS
வசூலில் ஜெட் ஸ்பீடில்… ரஜினியின் ஜெயிலரை பின்னுக்கு தள்ளி… வேகமாக முன்னேறி மாஸ் காட்டும் விஜய்யின் லியோ…!

தமிழில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி திரைக்கு வந்தது. இப்படம் திரைக்கு வந்த பின்பு நல்ல வசூலில் சாதனை படைத்திருந்தது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த படம் லியோ ஆகும். இப்படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வந்தது.
இப்படத்தின் ‘நான் ரெடி தான்’ பாடல் வெளியானது முதல் படம் ரிலீசானது வரை படத்திற்கு பல்வேறு சர்ச்சைகளும் விமர்சனங்களும் எழுந்து வந்தன. இந்நிலையில் இப்படம் வெளியான பிறகும்கூட முரண்பான விமர்சனங்களும் வந்தன. ஆனாலும் இந்த தடைகளை தகர்த்து எரிந்து படம் வாசலில் சாதனை படைத்து வருகிறது.இத்திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே முதல் நாளிலே 148 கோடி வசூல் செய்தது.
மேலும் திரைக்கு வந்து 12 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இப்படமானது 540 கோடி வசூல் செய்துள்ளது. இந்நிலையில் நெல்சன் இயக்கிய ரஜினி படமான ஜெயிலர் திரைக்கு வந்து 12 நாட்களில் 520 கோடி மட்டுமே வசூல் செய்து இருந்தது. இதனால் தற்பொழுது ஜெயிலர் படத்தை பின்னுக்கு தள்ளி வசூல் சாதனை படைத்து லியோவானது முதலிடத்தில் உள்ளது. லியோ படத்தின் வெற்றி விழா இன்று நடைபெற உள்ள நிலையில் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்துள்ளது.