என்ன நண்பா தளபதியின்… குட்டி ஸ்டோரி வெற்றி விழாவில் உண்டா …?என்ற கேள்விக்கு ப்ரோமோவை பதிவிட்டு பதிலளித்த 7 screen ஸ்டூடியோ…! - cinefeeds
Connect with us

LATEST NEWS

என்ன நண்பா தளபதியின்… குட்டி ஸ்டோரி வெற்றி விழாவில் உண்டா …?என்ற கேள்விக்கு ப்ரோமோவை பதிவிட்டு பதிலளித்த 7 screen ஸ்டூடியோ…!

Published

on

தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம், மாஸ்டர், விக்ரம் போன்ற படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. இந்த வெற்றி படங்களை அடுத்து லோகேஷ் விஜய்யை வைத்து லியோ  படத்தினை இயக்கி உள்ளார்.  இப்படமானது கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளிவந்தது. இந்நிலையில் வெளிவந்த இப்படமானது எதிர்மறையான விமர்சனங்களை பெற்றிந்தது. இருந்தபோதிலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வசூலில் சாதனை படைத்து வருகிறது.

இந்த படத்தில் விஜய் உடன் மன்சூர் அலிகான், சஞ்சய்தத், டான்ஸ் மாஸ்டர் சாண்டி,அர்ஜுன் மற்றும் பலர்  நடத்துள்ளனர். இந்த படம் திரைக்கு வந்து உலக அளவில் வசூலில் பெரும் சாதனை படைத்து வருகின்றது. கடந்த 12 நாட்களில் 540 கோடி வசூல் செய்துள்ளதாக 7 screen ஸ்டூடியோ நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. மேலும்  விஜய் தனது ஒவ்வொரு படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் ஒரு குட்டி ஸ்டோரி சொல்லுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

Advertisement

இது ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான மற்றும் ரசிகர்கள் விரும்பும் ஒன்று ஆகும்.  ஆனால் இந்த படத்திற்கு சில சூழ்நிலைகளின் காரணமாக இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை. இதனால் படக்குழு இதற்காக ரசிகளிடையே மன்னிப்பு கேட்டனர். மேலும் இதனை சரிகட்ட  தற்பொழுது இந்தப் படத்தின் வெற்றி விழாவானது இன்று சென்னை நேரு உள்விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்க்கான பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் வெற்றி விழாவில் விஜய் குட்டி ஸ்டோரி சொல்லுவாரா என்ற கருத்துக்கள் எழுந்து வந்துள்ள நிலையில் தற்போது செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ ஒரு விடியோவினை ட்விட்டரில் பதிவிட்டு உள்ளது. இதில் தளபதியின் குட்டி ஸ்டோரி இல்லாமல் எப்படி நண்பா என்று குறிப்பிட்டு ஒரு ப்ரோமோவினை பதிவிட்டிருந்தனர். இந்நிலையில் படத்தின் வெற்றி விழாவினை குறித்து அறிவிப்பு வெளிவந்த பொழுதே ரசிகர்கள்  மிகுந்த சந்தோஷத்தில் இருந்தனர். மேலும் தற்பொழுது வெளியாகி உள்ள குட்டி ஸ்டோரியினை பற்றிய தகவலால் ரசிகர்கள் சந்தோஷத்தின் உச்சிக்கே சென்றுள்ளனர். அந்த ப்ரோமோவின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது…,

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement