LATEST NEWS
திரைக்கு வந்து 12 நாட்கள் ஆகியும்… வசூலில் மாஸ் காட்டிக்கொண்டிருக்கும் லியோ … new update கொடுத்த படக்குழு…!
இளையதளபதி விஜய் கதாநாயகனாக நடித்து உருவான படம் லியோவாகும். இப்படத்தினை விக்ரம் படத்தில் வெற்றியை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இதனால் இப்படத்தினை குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் லியோ கடந்த அக்டோபர் 19தேதி வெளியானது. ஆனால் படம் வெளியான பிறகு இதனை பற்றி கலவையான விமர்சனகங்களே வெளிவந்தது.
ஏனெனில் படமானது முதல் பாதியில் விறுவிறுப்பாகவும், பிற்பகுதி மிகவும் ஸ்லோவாக செல்வதாக கருத்துக்கள் வெளியாகி வந்தன. இவ்வாறு முரண்பட்ட கருத்துகள் வெளியான பொழுதும் இப்படத்தின் வசூல் ஆனது நாளுக்கு நாள் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் லியோவானது கடந்த 16 நாட்களில் 540 கோடி வசூல் செய்ததாக தகவல் படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7screen ஸ்டுடியோ புதிய அப்டேட் -யை ட்விட்டரில் பதிவிட்டு உள்ளது.
மேலும் வேறு எந்த முன்னணி கதாநாயகர்களின் படங்களும் தற்பொழுது திரைக்கு வராததால் லியோ படம் இன்னும் வசூலில் சாதனை படைக்கும் என எதிர்ப்பாக்கப்படுகிறது. இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ்மேனன், மன்சூர் அலிகான், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, த்ரிஷா மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
Fireproof Box Office Records🔥 There’s nothing you can do😁
540+ Crores gross collection in just 12 Days 🦁#Leo Worldwide Badass Box Office Sambavam ❤️🔥#LeoIndustryHit#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @duttsanjay @akarjunofficial… pic.twitter.com/L3gRnU6jRm
— Seven Screen Studio (@7screenstudio) October 31, 2023