LATEST NEWS
என்ன டாப் ஹீரோயின்களான நயன்தாரா -திரிஷா … இணைந்து நடிக்க போறாங்களா… கசிந்துள்ள டாப் நியூஸ்…!

தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களாக கதாநாயகிகளாக நிலைத்து நிற்பவர்கள் நயன்தாரா மற்றும் திரிஷா. இவர்கள் இருவரும் தனது கதாநாயகி அந்தஸ்தில் இருந்து இதுவரை இறங்கவில்லை. மேலும் டாப் நடிகைகளான நயன்தாரா மற்றும் திரிஷாவும் இதுவரை ஒன்றாக எந்த படத்திலும் நடித்ததில்லை. இந்நிலையில் நயன்தாரா ஐயா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் .இதை ஜோடி படத்தில் சிறிய கதாபாத்தில் திரிஷா வந்தாலும், இதன் பின்பு சாமி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இடையே கமல் தனது பிறந்த நாளன்று எனது படமான ‘கமல் 234’ படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகும் என்று கூறியிருந்தார். இதனால் ரசிகர்கள் பெரும் ஆர்வமுடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகின்றனர். கமல் 234 படத்தினை மணிரத்தினம் இயக்கவுள்ளார் எனவும் இப்படத்தினை பற்றி அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தில் கதாநாயகிகளாக த்ரிஷாவும், நயன்தாராவும் நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. மேலும் இப்படத்தில் நடிக்க திரிஷா சம்பளத்தின் அட்வான்ஸ் பெற்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இதுவரை நயன்தாரா இதில் ஒப்பந்தமாகியுள்ளாரா என்ற தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.