வெற்றி மாறன் தான் வில்லன் … லோகேஷ் கனகராஜின் hot talk… ட்ரெண்டிங்கில் லியோ… ! - cinefeeds
Connect with us

LATEST NEWS

வெற்றி மாறன் தான் வில்லன் … லோகேஷ் கனகராஜின் hot talk… ட்ரெண்டிங்கில் லியோ… !

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ஆனது லியோ. இப்படம்  வெளிவந்த முதல் நாளில் இருந்து வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில்  12 நாட்களில் 540 கோடி வசூல் செய்து ரஜினியின் ஜெயிலர் படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது. இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா போல் ஏதும் நடைபெறவில்லை. இந்த சூழலில் நேற்று படத்திற்கான வெற்றி விழா நேரூ உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் விஜய், த்ரிஷா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மிஷ்கின், அர்ஜூன், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், மடோனா, மேத்யூ தாமஸ், மரியம் ஜார்ஜ், ஜனனி என லியோ படத்தில் நடித்த அனைவரும் பங்கேற்றுள்ளனர். இதில் கலந்துகொண்ட லோகேஷ் கனகராஜ்,  ‘இந்தப் படம் எனக்கு விஜயுடன் இரண்டாம் படமாகும். இந்த வாய்ப்பு தந்தமைக்கு விஜய்க்கு மிக்க நன்றி. மேலும் படத்திற்கு பூஜை போட்ட பிறகு இந்த படத்திற்கான ப்ரோமோஷன் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை.

Advertisement

இதுவே முதல் மேடை, அதும் வெற்றி விழா மேடையாக அமைந்தது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இதை அடுத்து பேசிய அவர்,  நான் எனது 2-3 படத்தின் வில்லன் கதாபாத்திரத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் பொருத்தமாக இருப்பார் என கருதினேன். எனவே  இரண்டு முறை அவரை அணுகிய போது அவர் இதற்கு ஒத்துழைக்கவில்லை. வெற்றிமாறனை ஒரு நடிகராக மாற்ற எனக்கு மிகவும் ஆர்வமாக உள்ளது எனவே கூடிய விரைவில் இதை செய்து முடிப்பேன்.

இதனிடையே படத்தின் இறுதி வெர்ஷனை கண்ட விஜய் என்னை ஆரத்தழுவி முத்தமளித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது  என்று கூறியிருந்தார். மேலும் நிகழ்ச்சி தொகுப்பாளர் இதற்கு என்ன பரிசினை எதிர்பார்க்குறீர்கள் என வினவியதற்கு ஹெலிகாப்டர் பெயிண்ட் அடித்துக்கொண்டு இருக்கிறார்கள் அதற்காக பொறுமையாக காத்துக்கொண்டு உள்ளேன் என்று கூறினார்.

Advertisement
Continue Reading
Advertisement